தைவான் தலைநகர் தைபேயில் சாங்ஷன் ரெயில் நிலையத்தில் நேற்று இரவு பயணிகள் ரெயில் நின்று கொண்டிருந்தது. அதில் ஏராளமான பயணிகள் இருந்தனர். அப்போது ஒரு பெட்டியில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் 6 பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


இதனால் அந்த பெட்டி பலத்த சேதம் அடைந்ததுடன் அதில் பயணம் செய்த 25 பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்த தும் மீட்பு படையினர் விரைந்து வந்து காயம் அடைந்த அனைவரையும் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த் தனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 



இதற்கிடையே குண்டு வெடித்த ரெயில் பெட்டியை போலீசார் சோதனை செய்தனர். அதில் 15 முதல் 20 சென்டி மீட்டர் நீள குழாய்க்குள் வெடி மருந்து திணித்து வெடிக்க செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இது பார்ப்பதற்கு பட்டாசு போன்று உள்ளது. இதுகுறித்து தொடர்ந்து விசராணை நடத்தப்பட்டு வருகிறது.