தாலிபான்கள் தொடர்ந்து பெண்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், மற்றொரு நடவடிக்கையாக, இரண்டு நகரங்களில் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்த தடை விதித்துள்ளது. தாலிபான் போராளிகள் வீடு வீடாகச் சென்று பெண்களை அச்சுறுத்தி வருவதுடன், அனைத்து கருத்தடை மருந்துகள் மற்றும் சாதனங்களை அகற்றுமாறு மருந்தகங்களுக்கு உத்தரவிடுகின்றனர். கருத்தடை மாத்திரைகள் முஸ்லிம் மக்கள் தொகையை கட்டுப்படுத்த மேற்கத்திய நாடுகளின் சதி என்று தலிபான் போராளிகள் கூறுகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆப்கானியர்கள் ஏற்கனவே கடுமையான வறுமை மற்றும் மருத்துவ வசதி உள்ளிட்ட வசதிகள் இல்லாததால் அவதிப்பட்டு வருகின்றனர். தலிபான்கள் பெண்களை வேலை செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதால், பல குழந்தைகளைக் கொண்ட பல குடும்பங்கள், போதிய வருமானம் இல்லாமல் தங்கள் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதில் கூட சிரமத்தை எதிர்கொள்கின்றன.


ஆகஸ்ட் 2021 இல் ஆட்சிக்கு வந்த தலிபான், பெண்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரத்தின் மீதான ஒடுக்குமுறையைத் தொடங்கியுள்ளது. பெண்களுக்கான உயர்கல்வியை நிறுத்தியது, பெண்களுக்கான பல்கலைக்கழகங்களை மூடுவது மற்றும் பெண்களை வேலையில் இருந்து வெளியேற்றுவது என தொடர்ந்து உரிமைகளை பறித்து வருகின்றனர்


சிவில் சட்டங்களை அகற்றி, இஸ்லாமிய சட்டங்களை அமல்படுத்த தலிபான்கள் நாடு முழுவதும் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய பின், முற்றிலும் இஸ்லாமிய சமுதாயத்தை உருவாக்குவதற்காக நாட்டின் உள்ள சிவில் சட்டங்கள் மற்றும் அமைப்புகளை அகற்றுவதை நோக்கமாகக் கொண்டது. ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, தலிபான்கள் அரசியலமைப்பை அகற்றுவதன் மூலமும், இஸ்லாமிய சட்டதை கடுமையாக அமல்படுத்துவதன் மூலமும் நாட்டின் நீதி அமைப்பை அழித்துள்ளனர்.


தலிபான்கள் எதிர்த்து குரல் கொடுப்பவர்களை சிறைகளில் தள்ளி வருவதால், சிறைகள் நிரம்பி வழிகின்றன. அடிப்படை சிவில் உரிமைகளை இழந்த ஆண்கள் மற்றும் பெண்களும் சிறையில் சித்திரவதைக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய ஆப்கானியர்களைப் பாதுகாப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட சமூக பாதுகாப்பு சட்டத்தை நீக்கிவிட்டனர். இஸ்லாமிய மதத்தை விம்ரசிக்கும் குரல்களை ஒடுக்கி, கருத்து சுதந்திரத்தை கேள்விக்குறியாக்கியுள்ளனர். மேலும், ஊடகங்களையும் அச்சுறுத்தி தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டுள்ளனர்.


மேலும் படிக்க | பாகிஸ்தான் எல்லை பகுதியை மூடிய தாலிபான்... சிக்கலில் பாகிஸ்தான்!


தலிபானின் உச்ச தலைவரான ஹைபத்துல்லா அகுந்த்சாதா, குற்றஞ்சாட்டப்பட்ட குற்றவாளிகளை இஸ்லாமிய சட்டத்திற்கு ஏற்ப தண்டனை கொடுப்பது குறித்து கூறிவருகிறார். கசையடி, கல்லடி போன்ற கொடூரமான தண்டைகளை கொடுக்க வேண்டும் என கூறி வருகிறார். 


ஆட்சிக்கு வந்ததிலிருந்து, தலிபான்கள் பெண்கள் கல்வி கற்பதை தடைசெய்து, மனித உரிமை அமைப்புகளில் பெண்கள் பணியாற்றுவதையும் தடைசெய்துள்ளனர். இந்த உத்தரவுகள் உலகளாவிய அளவில் கடுமையாக எதிரகப்பட்டது என்றாலும், அவர்களுக்கு உரிமைகள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால், ஆப்கானில் உதவுவுதற்காக தங்கிய குழுக்கள், ஆப்கானியர்களுக்கு உதவி வழங்கும் நடவடிக்கைகளை கை விடும் நிலை ஏற்பட்டது. மற்ற நாடுகள் அதன் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடக் கூடாது என்று தலிபான் கூறியதால், அனைவரும் நாட்டை விட்டு வெளியேறி சென்றனர். 


மேலும் படிக்க | பாகிஸ்தான் சென்ற இந்திய குரங்குக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்! கை விரிக்கும் வனத்துறை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ