காபூல்: பிரிட்டிஷ் துருப்புக்கள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற தாலிபான் காலக்கெடு விதித்துள்ளது. ஒரு வாரத்திற்குள் பிரிட்டிஷ் இராணுவம் ஆப்கானிஸ்தானிலிருந்து செல்லவில்லை என்றால், அதன் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று தாலிபான் பயங்கரவாத அமைப்பு கூறியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காபூல் விமான நிலையம் தற்போது அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் படைகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இரு நாடுகளும் தங்கள் குடிமக்களையும் ஆப்கானியர்களையும் வெளியேற்றி வருகின்றனர். தற்போது இருக்கும் சூழலில், முழு மீட்புப் பணியையும் ஒரு வாரத்தில் முடிப்பது சாத்தியமில்லை. இத்தகைய சூழ்நிலையில், தாலிபான்களின் (Taliban) காலக்கெடு பிரிட்டனின் கவலையை அதிகரித்துள்ளது.


போரிஸ் ஜான்சன் இன்று ஜோ பைடனை சந்திப்பார்


'தி சன்' அறிக்கையின்படி, பிரிட்டிஷ் துருப்புக்கள் ஒரு வாரத்திற்குள் காபூல் விமான நிலையத்தை விட்டு வெளியேறாவிட்டால், அவர்கள் போருக்குத் தயாராக வேண்டும் என்று தாலிபான்கள் அச்சுறுத்தியுள்ளனர். ஒரு நிமிட தாமதம் கூட கடுமையான மோதலுக்கு வழிவகுக்கும் என்று பயங்கரவாத அமைப்பான தாலிபான் எச்சரித்துள்ளது. 


இதற்கிடையில், ஜி 7 சந்திப்பின் போது, ​​இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை (Joe Biden) இன்று சந்திக்கிறார். அதிக அளவிலான மக்களை ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற்றும் பொருட்டு, அங்கிருந்து துருப்புகளை திரும்ப அழைப்பதற்கான ஆகஸ்ட் 31 ஆம் தேதி காலக்கெடுவை நீட்டிப்பது குறித்து ஜான்சன் அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் பேசுவார்.


ALSO READ: Afghanistan: நெயில் பாலிஷ் பூசும் பெண்களின் விரல்களை துண்டிக்க தாலிபான் உத்தரவு


துரிதப்படுத்தப்பட்ட மீட்பு பணி


நிபுணர்களின் கூற்றுப்படி, அமெரிக்கா காலக்கெடுவை நீட்டிக்க மறுத்தால், அடுத்த ஏழு நாட்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து வீரர்களை வெளியேற்ற மட்டுமே நேரம் கிடைக்கும். இத்தகைய சூழ்நிலையில், நாட்டை விட்டு வெளியேறும் நம்பிக்கையுடன் விமான நிலையத்திற்கு வந்த வண்ணம் உள்ள ஆப்கானியர்கள் ஏமாற்றம் அடைவார்கள். இதற்கிடையே, பிரிட்டன் மீட்புப் பணியை தீவிரப்படுத்தியுள்ளது. முடிந்தவரை பலரை அங்கிருந்து வெளியேற்றும் வகையில், இங்கிலாந்தின் பல விமானங்கள் காபூலைச் சுற்றி வருகின்றன.


எதிர்பார்த்ததை விட முன்னதாகவே கைப்பற்றப்பட்டது


ஆகஸ்ட் 31-க்குள் ஆப்கானிஸ்தானில் (Afghanistan) இருந்து முழுமையாக வெளியேறுவதாக அமெரிக்கா அறிவித்திருந்தது. ஆனால் அதற்கு முன் தாலிபான் பொறுப்பேற்றது. இப்போது ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறும் எண்ணத்துடன் மக்கள் விமான நிலையத்தை அடையும் விதத்தைப் பார்த்தால், இந்த கால அளவு மிகக் குறைவானது என்பது தெளிவாகிறது. 


இத்தகைய சூழ்நிலையில், தாலிபான்களின் அச்சுறுத்தல் நிலைமையை மேலும் கவலையடையச் செய்துள்ளது. உலகம் முழுவதும் சுமார் 230 விமானங்கள் தற்போது மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளன. இதில் டெல்டா, அமெரிக்கன் ஏர்லைன்ஸ் மற்றும் யுனைடெட் ஏர்லைன்ஸ் ஆகிய 18 சிவில் விமானங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.


வெளியேற்றப்பட காத்திருக்கும் மக்கள் 


தற்போது, ​​சுமார் 1800 பிரிட்டிஷ் பிரஜைகள் மற்றும் அவர்களது பணிகளில் ஈடுபட்டிருக்கும் சுமார் 2500 ஆப்கானியர்கள், காபூல் விமான நிலையத்தில் காத்திருக்கின்றனர். ஆகஸ்ட் 14 முதல், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து சுமார் 37,000 பேரை  ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்றியுள்ளனர். ஆனால் இன்னும் பல பணிகள் செய்ய வேண்டியுள்ளன. இப்போது காலக்கெடுவை அதிகரிப்பதற்கான இங்கிலாந்தின் கோரிக்கையை அமெரிக்கா ஏற்றுக்கொண்டால், அதற்கு தாலிபான்களின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பது மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.


ALSO READ: Super Mother Hero: 10 ஆப்கன் சிறுமிகளை மீட்ட 11 குழந்தைகளின் அமெரிக்க அன்னை 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR