ஆப்கானிஸ்தான் தாலிபான் வசம் சென்றதில் இருந்து, உலகளாவிய அங்கீகாரம் தங்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதே தாலிபான்களின் விருப்பமாக உள்ளது. இதற்காக அவர்கள், தாங்கள் முன் போல் இருக்க மாட்டோம் என்பதை உணர்த்த முயன்று வரும் போதிலும், அங்கு உண்மை நிலை வேறு மாதிரியாக உள்ளது என்பதை செய்திகள் உணர்த்தி வருகின்றன. இந்நிலையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் சமீபத்திய கருத்து அவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தலிபான்கள் (Taliban) குழுவை பயங்கரவாத பட்டியலில் இருந்து நீக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வெளியிட்டுள்ள அறிக்கையை தலிபான்கள் பாராட்டியுள்ளனர். சர்வதேச வால்டாய் கிளப்பின் (International Valdai Club) கூட்டத்தில், தலிபான் இயக்கம் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் இருந்து நீக்கப்படலாம் என்று புடின் கூறினார்.


ALSO READ | ஆபத்தில் ஆப்கானிஸ்தான்: பணம், நிலம் தந்து தற்கொலைத் தாக்குதலை ஊக்குவிக்கும் தாலிபான்


எனினும், இந்த நடவடிக்கை ஐநா மட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் கூறியதாக, என்று ரஷ்ய செய்தி நிறுவனம் TASS தெரிவித்துள்ளது.


"ஆப்கானிஸ்தானின் (Afghanistan) இஸ்லாமிய அரசின் வெளியுறவு அமைச்சகம், ரஷ்ய கூட்டமைப்பின் தலைவர் விளாடிமிர் புடின், IEA தலைவர்களின் பெயர்களை கறுப்புப் பட்டியலில் இருந்து நீக்குவது குறித்து குறிப்பிட்டுள்ளது பாராட்டுக்குரியது" என்று ஆப்கானிஸ்தானின் இடைக்கால அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் அப்துல் கஹார் பால்கி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.


"ஆப்கானிஸ்தானில் போர் முடிவுக்கு வந்துவிட்டதால், உலக நாடுகளும் ஆப்கானிஸ்தானை நோக்கி தங்கள் உறவு மற்றும் அணுகுமுறையில் நேர்மறையான மாற்றத்தை கொண்டு வர வேண்டும். பரஸ்பர கொள்கையின் அடிப்படையில் சர்வதேச சமூகத்துடன் நாங்கள் நல்ல உறவுகளை ஏற்படுத்த வேண்டும் என விரும்புகிறோம்" என்று தலிபான் செய்தித் தொடர்பாளர் ட்வீட் செய்துள்ளார்.


"ஆப்கானிஸ்தானை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தலிபான்கள், நிலைமை இயல்பாக இருப்பதை உறுதி செய்வார்கள் என்று நாங்கள் அனைவரும் எதிர்பார்க்கிறோம்," என்று புடின் கூறினார்.


கடந்த ஆகஸ்டில், தலிபான்கள் காபூலைக் கைப்பற்றினர், செப்டம்பரில், ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய அரசு ஏற்படுத்தபப்ட்டுள்ளதாக அறிவித்து இடைக்கால அரசாங்கத்தை அமைத்தனர்.


தலிபான்கள் சர்வதேச அங்கீகாரத்திற்காக நீண்ட காலமாக வற்புறுத்தி வரும் நிலையில், தாலிபான்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் முன்பு, தாலிபான்கள் அதற்கு ஏற்றவாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை சர்வதேச சமூகம் தெளிவுபடுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ | ISI toolkit: காஷ்மீரை இன்னொரு காபூலாக மாற்ற பாகிஸ்தான் சதி..!!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR