இலங்கை தமிழர்களுக்கு நன்மை தரும் பல கோரிக்கைக்களை முன்வைத்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பு செயற்படவேண்டும் என வட மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழக கட்சியின் தலைவருமான அனந்தி சசிதரன் தெரவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இலங்கையில் நிலவும் அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு காண வரும் 14-ஆம் தேதி நாடாளுமன்றம் கூட்டப்படுகிறது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை யார் நிரூபிக்கப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், அரசியல் உயர்மட்டச் சந்திப்புக்கள் கொழும்பில் தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றன.


இதற்கிடையில், மனோ கணேசன் தலைமையிலான ராஜபக்சே அரசிற்கு ஆதரவு அளிக்கப்போவதில்லை என அறிவித்தார். இந்நிலயில் தற்போது அனந்தி சசிதரன், யாருக்கு ஆதரவு வழங்குவது என்பதை தீர்மானிப்பதுடன் கடும் நிபந்தனையுடனேயே ஆதரவு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் கடந்த 2015-ஆம் ஆண்டு எந்தவித நிபந்தனையும் இன்றி ஆதரவு வழங்கியதாலேயே மூன்று ஆண்களாக ஏமாற்றப்பட்டு வருகின்றோம், எனவே தற்போது நிபந்தனையுடன் ஆதரவை வழங்குவதில் தமிழ் கூட்டமைப்பு சிந்தித்து செயல்படவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.


சமீபத்தில், இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவி நீக்கம் செய்து அதிபர் சிறிசேன அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். மேலும், முன்னாள் அதிபர் ராஜபக்சவை புதிய பிரதமராக அறிவித்து, பதவியேற்கச் செய்தார். அதிபர் சிறிசேனவின் அறிவிப்பை ஏற்காத ரணில், பிரதமராக தான் நீடிப்பதாக அதிபருக்கு கடிதம் எழுதினார். ராஜபக்சேவை பிரதமர் பதவியில் நியமிக்க அதிபர் சிறிசேனாவுக்கு அதிகாரம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். 


இதனைத்தொடர்ந்து தமக்கு பெரும்பான்மை இருப்பதாகவும், நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும் என்றும் ரணில் கோரிக்கை விடுத்தார். இந்தநிலையில் வரும் 14- ஆம் நாள் அந்நாட்டு நாடாளுமன்றம் கூட உள்ளது. இலங்கை நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வெற்றிபெற 113 வாக்குகள் தேவை.