மறைந்த தன் தந்தையினை நினைவு கூறும் விதமாக தீயணைப்பு வண்டியில் தன் முதல் நாள் பள்ளிக்கு வந்து அமெரிக்க சிறுவன் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐக்கிய நாடுகளின் டென்னிஸ் மாகானத்தை சேர்ந்தவர் கிறிஸ்டோபர். தீயணைப்பு வீரராக இருந்த இவருக்கு 3 பிள்ளைகள். இவர் 6 மாதங்களுக்கு முன்பு தீயனைப்பு சம்பவத்தில் ஈடுப்பட்டபோது பரிதாபமாக உயிர் இழந்தார்.


இந்நிலையில் மறைந்த தன் தந்தையின் நினைவாக, அவர் பயன்படுத்திய தீயணைப்பு வாகனத்தில் பள்ளி செல்ல விரும்பிய மகன் கூப்பர்(5) தனது முதல் நாள் பள்ளிக்கு தீயனைப்பபு வாகனத்தில் சென்று பள்ளி நிர்வாகத்தையே வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.



இதுகுறித்து கூப்பர் தெரிவிக்கையில்., என் தந்தை சிறந்த வீரர். தன் தொழில் மீது பற்றுக் கொண்டவர். அவரை கௌரவப்படுத்த அவர் செய்த பணியினை அனைவருக்கும் வெளிப்படையாக காட்ட விரும்பினேன். தற்போது குழந்தையாக இருக்கும் எனது இரட்டை சகோதர்களையும் விரைவில் இந்த வாகனத்தில் ஏற்றிச் செல்வேன் என குறிப்பிட்டுள்ளார்.



கூப்பரின் பள்ளி பயணத்தின் போது வாகனம் ஓட்டிய மற்றொரு தீயணைப்பு வீரரும், கூப்பரின் தந்தை கிறிஸ்டோபரின் நண்பருமான கெம்ப் இதுகுறித்து தெரிவிக்கையில்... கிறிஸ்டோபர் எனது நெடுநாள் நண்பன். என் நண்பனின் குடும்பத்தை அவன் இன்றி பார்க்கையில் பெரும் வருத்தம் அடைகின்றேன். என் நண்பனின் குழந்தைகளை நான் வாகனத்தில் ஏற்றிச் சென்ற போது என் குடும்ப உறுப்பினர்களை ஏற்றிச் சென்றது போலவே உணர்கின்றேன் என தெரிவித்துள்ளார்!