பெட்ரோல் டீசல் விலைகள் அதிகரித்து வருவதை அடுத்து, மக்களின் கவனம் எலக்ட்ரிக் வாகனத்தின் பக்கம் திரும்பியுள்ளது. எலக்ட்ரிக் வாகனங்கள் அறிமுகத்திற்காக மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா (Tesla) இந்தியாவில், தனது  நான்கு மாடல்கள்/வேரியண்டுகளுக்கு, ஹோமோலேஷன் (homologation) நிலையிலான நிபந்தனைகளை பூர்த்தி செய்து ஒப்புதலை பெற்றுள்ளது. இதை அடுத்து இந்தியாவில் இதனை அறிமுகப்படுத்த  தடை ஏதும் இல்லை. ஹோமோலோகேஷன் (homologation) என்பது சாலையில் வாகனத்தை ஓட்ட  தேவையான அனைத்து அளவுகோல்களையும் பூர்த்தி செய்துள்ளது என்பது பொருளாகும். 


மத்திய அரசின் கட்டுபாட்டில் உள்ள வாகன் சேவா, டெஸ்லா இந்தியா மோட்டார்ஸ் மற்றும் எனர்ஜி ஆகியவற்றிலிருந்து வெளிவந்த தகவல்கள், டெஸ்லாவின் இந்திய துணை நிறுவனம் அதன் நான்கு வாகன வேரியண்ட்களுக்கு ஒப்புதல்களைப் பெற்றுள்ளதாக கூறுகின்றன. 


மாடல்களின் குறிப்பிட்ட விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை ஆனால் டெஸ்லாவின் பல சோதனை கார்கள் இந்திய சாலைகளில் காணப்படுகின்றன. மாடல் 3 மற்றும் மாடல் Y கடந்த பல வாரங்களாக இந்தியாவில் சோதனை நிலைகளில் உள்ளன.


ALSO READ | இந்தியாவில் டெஸ்லா நிறுவனம்; போட்டி போடும் குஜராத், கர்நாடகா மாநிலங்கள்


இருப்பினும், இது எந்த வகையிலும் டெஸ்லா கார்கள் உடனடியாக அறிமுகப்படுத்த தயாராக உள்ளது எனக் கூற இயலாது. இந்தியாவில் கார்களை அறிமுகம் செய்வதற்கான திட்டங்களை டெஸ்லா இன்னும் இறுதி செய்யவில்லை.


இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான இறக்குமதி வரி மிகவும் அதிகமாக இருப்பதால், வரியை குறைக்க கோரி எலான் மஸ்க் தரப்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் இது குறித்து டெஸ்லா நிறுவனம் தரப்பில் இருந்து இந்திய அமைச்சகங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.


ALSO READ | 'இந்தியாவில் டெஸ்லா கார்களை விரைவில் கொண்டு வர ஆசைதான்; ஆனால்' : Elon Musk


இந்த ஆண்டில் இந்தியாவில் எலக்ட்ரிக் வாகன விற்பனையைத் தொடங்குவதை நோக்கமாகக் கொண்ட டெஸ்லா நிறுவனம் , மத்திய அமைச்சர்கள் மற்றும் நிதி ஆயோக் ஆகியோருக்கு எழுதிய கடிதத்தில், டெஸ்லா கார்களை இறக்குமதி செய்வதற்கான வரிகளை 40% ஆக குறைக்க கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR