பிராண்டன் டலாலி என்ற நபர் டெஸ்லா காரை வைத்திருக்கிறார். காரை திறப்பதற்காகப் பயன்படுத்தப்படும் சிப்பை, பிராண்டன் டாலி ஒரு நிபுணரின் உதவியும் தனது வலது கைக்குள் பொருத்திக் கொண்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனை தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள அவர், பின்னர் வெறுமனே கைகளைக் காட்டி கார் கதவைத் திறப்பதையும் வீடியோவாகப் பதிவிட்டுள்ளார். தனது இடது கையில் ஏற்கனவே மற்றொரு சிறிய சிப்பை வைத்திருப்பதாகவும், அதில் தனது கொரோனா வைரஸ் தடுப்பூசி அட்டை, அவரது வீட்டின் சாவி, அவரது தொடர்பு அட்டை மற்றும் பிற தகவல்கள் உள்ளதாகவும் கூறியுள்ளார். இடது கையில் தனது வீட்டுச் சாவியும், வலது கையில் கார் சாவியும் இருக்க வேண்டும் என்பதே தனது எண்ணம் என பிராண்டன் டலாலி கூறியுள்ளார்.


மேலும் படிக்க | இருளில் ஜொலிக்கும் வியாழன் கிரகம்; நாசா வெளியிட்டுள்ள அற்புத புகைப்படம்!



இதற்கு 400 டாலர்கள் செலவாகியுள்ளது. இதற்கு சமூக வலைதளங்களில் பல விதமான விமர்சனங்கள் எழுந்துள்ளன. டெஸ்லா சிப் வெறும் கார் சாவி மட்டுமல்ல எனவும், அதனை தகவல் சேமிப்பு, கிரிப்டோ வேலட், எதிர்காலத்தில் கிரெடிட் கார்டாகக் கூட பயன்படுத்தக் கூடியது என சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.


மேலும் படிக்க | வரலாறு காணாத வறட்சியைச் சந்திக்கும் சீனா


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ