தாய்லாந்து குகையில் சிக்க மீட்கப்பட்ட விளையாட்டு வீரர்கள் மருத்துவமனையில் இருந்து விடைப்பெற்றனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தாய்லாந்தின் மே ஸை பகுதியில் உள்ள குகையினுள் 16 வயதிற்குட்பட்ட 12 கால்பந்தாட்ட வீரர்கள் மற்றும் 25 வயதாகும் பயிற்சியாளர் உட்பட 13 பேர் சிக்கிக் கொண்டனர். குகையில் சிக்கி 9 நாட்களுக்கு பிறகு மீட்பு படையினர் அவர்கள் இருக்கும் இடத்தை அறிந்தனர். 


இதனையடுத்து தொடர் கனமழை காரணமாக குகையினுள் தேங்கும் மழைநீரின் அளவு அதிகரித்துக்கொண்டே வந்தது. குறுகிய, கரடுமுரடாண பாதையை கொண்ட குகை என்பதால் மீட்பு படையினர் பெரும் சவாலை சந்தித்து தொடர்ந்து முன்னேறினர்.


மழை தொடர்ந்தால் குகையினுள் நீர் தேக்கம் அதிகரிக்கக்கூடும் என்பதால், நீரை வெளியேற்றும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் குகையின் பின்புறம் வழியாக பாதை அமைக்கும் பணியும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. உணவு இல்லாமல் சோர்வடைந்த நிலையில் இருந்த அவர்களுக்கு தொடர்ந்து உணவு, மருந்துகள் முதலியவை வழங்கப்பட்டு வந்தன.


இச்சம்பவத்தில், தாமாக முன்வந்து சிறுவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட கடற்படை முன்னாள் அதிகாரி ஒருவர் உள்ளே ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு ராணுவம் மற்றும் கடற்படை சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. 


இதை தொடர்ந்து, வீரர்களின் கடுமையான முயற்சியால் ஜூலை 8 ஆம் தேதி 4 சிறுவர்களும், நேற்று 4 சிறுவர்களும் மீட்கப்பட்டிருந்தனர். எஞ்சிய 4 சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளரை மீட்கும் பணி துரிதப்படுத்தப்பட்டது. இதையடுத்து வெற்றிகரமாக இந்த 5 பெரும் கடந்த 10-ஆம் மீட்கப்பட்டுள்ளனர். குகையில் உள்ளே இருப்பவர்களை மீட்க ஒரு மாத காலம் வரை கூட  ஆகும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், 3 நாட்களில் அனைவரையும் பத்திரமாக மீட்டெடுக்கப்பட்டனர்.


மீட்கப்பட்ட அனைவரும் சியாங் ராய் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அனைவரும் இன்று மருத்துவமனையில் இருந்து விடைப்பெற்றுள்ளனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த சிறுவர்கள் குகையில் தாங்கள் அனுபவித்த வேதனைகளை பகிர்ந்துக்கொண்டனர்!