பாங்காக்: தாய்லாந்தின் சக்திவாய்ந்த மன்னர் அதிக அளவில் விமர்சிப்படுகிறார். விமர்சகர்களை அடக்கும் அரசாங்கத்தின் முயற்சிகள் அதிக அளவில் இருந்தபோதிலும் தக்க பதிலடி கொடுக்க முடியும் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.  ஒரு மில்லியனுக்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட 'ராயலிஸ்ட் மார்க்கெட்ப்ளேஸ்' (Royalist Marketplace) என்ற Facebook குழுவை பேஸ்புக் திங்கள்கிழமை இரவு மூடியது. அதன்பிறகு விமர்சகர்களால் உருவாக்கப்பட்ட புதிய பேஸ்புக் குழுவில், உடனடியாக ஐந்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் சேர்ந்துள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கணினி குற்றச் சட்டத்தை மேற்கோள் காட்டி 'ராயலிஸ்ட் சந்தை' தடை செய்யுமாறு தாய்லாந்து அரசு பேஸ்புக்கைக் கேட்டுக் கொண்டது. பேஸ்புக் அவ்வாறு செய்யாவிட்டால், அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாய்லாந்து டிஜிட்டல் அமைச்சகத்திலிருந்து எச்சரிக்கை செய்தி பேஸ்புக்கிற்கு அனுப்பப்பட்டது. இதன் பின்னர், மூத்த சமூக ஊடக நிறுவனம் திங்கள்கிழமை இரவு முடியாட்சி எதிர்ப்பு குழுவை மூடியது.


தாய்லாந்து அரசாங்கத்தின் உத்தரவைப் பின்பற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று கூறும் பேஸ்புக் நிறுவனம், நீதிமன்றத்தை அணுகப்போவதாகக் கூறுகிறது. இளைஞர்கள் தலைமையில், தாய்லாந்து மன்னருக்கு எதிராக தாய்லாந்தில் பல நாட்களாக ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன. போராட்டங்கள் சட்டவிரோதம் என்று அந்நாட்டு அரசு கருதுகிறது. எனவே, முடியாட்சிக்கு எதிரான சித்தாந்தத்தைக் கட்டுப்படுத்த பேஸ்புக்கிற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தான் 'ராயலிஸ்ட் மார்க்கெட்ப்ளேஸ்' குழுவை பேஸ்புக் மூட கட்டாயப்படுத்தப்பட்டது.


முடியாட்சியை விமர்சிப்பவர்களில் Pavin Chachavalpongpun  என்பவர், பேஸ்புக்கின் நடவடிக்கைக்குப் பிறகு விரைவில் ஒரு புதிய குழுவை உருவாக்கினார், இது இதுவரை அரை மில்லியனுக்கும் அதிகமான மக்களைச் சேர்த்தது. புதிய குழுவுக்கு Royalist Marketplace என்பதை ஒத்தவாறே எழுத்துக்களை மாற்றி பெயரிடப்பட்டுள்ளது.


தாய்லாந்தில் புதிய குழுவும் தடைசெய்யப்பட்டால், கருத்துச் சுதந்திரத்தை மேம்படுத்துவதற்காக மற்றொரு குழுவை அமைக்கப் போவதாக Pavin Chachavalpongpun  தெரிவித்துள்ளார். ஜப்பானில் வசிக்கும் அவர், ஏப்ரல் மாதத்தில் 'ராயலிஸ்ட் மார்க்கெட்ப்ளேஸ்' என்ற பேஸ்புக் குழுவை உருவாக்கினார். இந்தக் குழு தாய்லாந்தின் அரச குடும்ப உறுப்பினர்களைப் பற்றி வெளிப்படையாக பேசியது. தாய்லாந்தில் அரசக் குடும்பத்தைப் பற்றி பேசுவது ராஜதுரோகமாகும்.  மன்னரை அவமதித்தால், அந்நாட்டின் சட்டங்களின்படி அதிகபட்சம் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.


Also Read | கடந்த 24 மணி நேரத்தில் Googleஇல் Trend ஆகும் 'Kim Yo Jong Nude' அதிர்ச்சித் தகவல்!