இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்ற முதல் பிரெஞ்சு பெண் எழுத்தாளர் : யார் இந்த ஆனி எர்னெக்ஸ்
2022-ம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசை பிரெஞ்சு எழுத்தாளர் ஆனி எர்னெக்ஸ் வென்றுள்ளார்.
இளமைக் காலம்
ஆனி எர்னெக்ஸ் பிரான்சின் நார்மேண்டி பகுதியில் உள்ள லில்லிபோன் நகரத்தில் 1940-ம் ஆண்டு பிறந்தார். பின்னர் அவரது பெற்றோர் Yvetot நகருக்குக் குடி பெயர்ந்தனர். அங்கு அவரது பெற்றோர் மளிகைக் கடை வைத்து நடத்தினர். பின்னர் ஒரு கத்தோலிக்க பள்ளியில் பயின்ற ஆனி எர்னெக்ஸ், அங்கிருந்த நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மாணவிகளைக் கண்டு தனது உழைக்கும் வர்கக்த்தைச் சேர்ந்த பெற்றோரையும், தங்களது வாழ்க்கை முறையையும் அவமானமாகக் கருதியதாக அவரது வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தனது 18 வயதில் அதாவது 1958-ம் ஆண்டு முதன்முறையாக வீட்டை விட்டு வெளியேறிய ஆனி, கோடைக்கால முகாமில் குழந்தைகளைப் பராமரிக்கும் பணி புரிந்தார். ரூவன் பல்கலைக்கழகத்தில் பயின்ற அவர், 1977 முதல் 2000 வரை பேராசிரியராகப் பணியாற்றினார்.
படைப்புகள்
எர்னாக்ஸ் தனது முதல் நாவலான Les Armoires Vides ஐ 1974-ல் வெளியிட்டார். இந்த புத்தகம் அவரது கருக்கலைப்பு குறித்த புத்தகமாகும். அவர் 1984 இல் விவாகரத்து செய்த அவர் தனது மகன்களை தனியாக வளர்த்தார். அவரது 4-வது புத்தகமான La Place ஆனிக்கு அவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. இந்தப் புத்தகத்தில் அவரது தந்தையின் உணர்ச்சியற்ற நிலை குறித்தும், அவரை அந்நிலைக்கு தள்ளிய சமூக சூழல் குறித்தும் ஆனி எழுதியிருந்தார்.
திருமணமான வெளிநாட்டு நபர் ஒருவருடன் தனக்கு இருந்த உறவு குறித்து ஆனி எழுதிய A Simple Passion புத்தகம் பிரான்சில் அதிகமாக விற்பனையானது. 2000-ம் ஆண்டு அவர் எழுதிய நாவலான ஹேப்பனிங், சட்டவிரோத கருக்கலைப்பின் விளைவுகளை சித்தரிக்கிறது.
மேலும் படிக்க | சுமார் 12,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய தயாராகும் பேஸ்புக் நிறுவனம்!
பல புத்தகங்களை எழுதியிருந்தாலும், ஆனி எரினிக்ஸ் எழுதிய லெஸ் அன்னீஸ் (2008) புத்தகம் 2017-ம் ஆண்டு மொழிபெயர்க்கப்பட்ட பிறகுதான் அவர் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றார். 2014 ஆம் ஆண்டில், செர்ஜி-போன்டோயிஸ் பல்கலைக்கழகத்தால் அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
கேன்ஸ் விழாவில், தனது குடும்ப வாழ்க்கையின்போது எடுக்கப்பட்ட வீடியோக்களின் அடிப்படையில் உருவான தி சூப்பர் 8 இயர்ஸ் என்ற ஆவணப்படம் குறித்து விவரித்த ஆனி எர்னெக்ஸ், அந்த 10 வருடங்கள் தன் வாழ்வின் முக்கியமான வருடங்கள் எனவும், அவைதான் எழுதுவதற்கான தனது விருப்பத்தை உறுதிப்படுத்தின எனவும் கூறினார். காதல் திருமணம் செய்திருந்தாலும், தான் சுதந்திரம் இல்லாமல் தவித்ததாகவும், இது தனது வாழ்க்கையின் கதை மட்டுமல்ல, விடுதலையைத் தேடிக்கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான பெண்களின் கதை எனக் குறிப்பிட்டார்.
எழுத்து என்பது ஒரு அரசியல் எனவும், சமூக சமத்துவமின்மைக்கு எதிராக நம் கண்களைத் திறக்க எழுத்து உதவுவதாகவும் ஆனி எர்னாக்ஸ் குறிப்பிடுகிறார். இலக்கியத்திற்காக இதுவரை 119 பேர் நோபல் பரிசு வாங்கியுள்ள நிலையில், ஆனி எர்னெக்ஸ் 17-வது பெண் ஆவார்.
மேலும் படிக்க | உய்குர் முஸ்லிம் விவகாரம்: இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையில் அசந்து போன சீனா!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
மேலும் படிக்க |