சுமார் 12,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய தயாராகும் பேஸ்புக் நிறுவனம்!

பேஸ்புக் நிறுவனத்தில், திறமையாக பணியாற்றாத ஊழியர்களை பணிநீக்கம் செய்ய தயாராகி வருவதால், மொத்தம் சுமார் 12,000 ஊழியர்களின் வேலை பறிபோகும் நிலை உருவாகியுள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 7, 2022, 07:43 AM IST
  • பேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவன சந்தை மதிப்பீடு 2022ம் ஆண்டு முதலே சரிவை சந்தித்து வருகிறது.
  • மெட்டா நிறுவனத்தின் அனைத்து துறைகளிலும் ஆட்சேர்ப்பு தடைசெய்யப்பட்டுள்ளது.
  • பணிநீக்கத்தின் போது சில ஊழியர்களுக்கு 'வாய்ப்பு' வழங்கப்படுகிறது.
சுமார் 12,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய தயாராகும் பேஸ்புக் நிறுவனம்! title=

உலகின் முன்னணி சமூகவலைத்தள நிறுவனமான பேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டா (Meta) நிறுவன சந்தை மதிப்பீடு 2022ம் ஆண்டு முதலே சரிவை சந்தித்து வரும் நிலையில், பேஸ்புக் நிறுவனத்தில்,கடந்த மே மாதம் முதல் புதிய ஆட்சேர்ப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்போது பேஸ்புக் நிறுவனம் சத்தம் இல்லாமல் பணிநீக்கம் செய்யத் தயாராகி வருகிறது. பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, செயல்திறன் மோசமாக உள்ளதாக கருதப்படும் ஊழியர்களை நீக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அத்தகைய ஊழியர்களின் எண்ணிக்கை சுமார் 12,000 என்று கூறப்படுகிறது. இது பேஸ்புக்கின் மொத்த ஊழியர்களில் 15% ஆகும். இதற்குப் பிறகும், நிறுவனம் மேலும் பணிநீக்கத்தைத் தொடரலாம் என்றும் 

மெட்டா நிறுவனம் இந்த பணிநீக்கத்தை ரகசியமாக மேற்கொண்டு வருவதாக ஐஏஎன்எஸ் செய்தி வெளியிட்டுள்ளது. பேஸ்புக் ஊழியர்கள் பல மாதங்களாக இந்த பணிநீக்கத்திற்கு மனதளவில் தயாராக உள்ளனர். ஏனெனில் மெட்டாவின் உரிமையாளரான மார்க் ஜுக்கர்பெர்க், மே மாதத்திலேயே அதைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார் என கூறப்படுகிறது. மெட்டாவின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான ஜுக்கர்பெர்க், ஊழியர்களுடன் மெட்டா நிறுவனத்தின் வருவாய் தொடர்பான விவரங்களை தெரிவ்க்கிகையில், பணி நீக்கம் குறித்து சுட்டிக்காட்டினார் என கூறப்படுகிறது.

மெட்டா நிறுவனத்தின் வருவாய் தொடர்பான கூட்டத்தின் போது, ​​அனைத்து துறைகளிலும் ஆட்சேர்ப்பு தடைசெய்யப்பட்டுள்ளது என்பதை ஜுக்கர்பெர்க் தெளிவுபடுத்தினார். அதே சமயம் நிறுவனத்தில் விரைவில் ஆட்குறைப்பு ஏற்படப் போகிறது என்றும் கூறியிருந்தார். அடுத்த ஆண்டு ஊழியர்களின் எண்ணிக்கையை தொடர்ந்து குறைக்கும் திட்டம் உள்ளதாகவும் கூறியிருந்தார். 

நிறுவனத்தில் ஆட்குறைப்பு பொறுப்பு பல மூத்த அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர்கள் அமைதியாக இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர் எனவும் கூறப்படுகிறது. ஊழியர்களின் செயல்திறன்களை மதிப்பிட்டு, சிறப்பாக பணியாற்றாத ஊழியர்களை அடையாளம் கண்டு, பணி நீக்கம் செய்ய நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும் படிக்க | அமெரிக்க தேர்தலை குறிவைத்த ரஷ்யாவில் இருந்து இயங்கிய நெட்வர்க்குகளை நீக்கியது மெட்டா

இருப்பினும், பணிநீக்கத்தின் போது சில ஊழியர்களுக்கு 'வாய்ப்பு' வழங்கப்படுகிறது. இதற்காக, அவர்கள் 60 நாள் மற்றும் 30 நாள் கத்திருப்பு பட்டியல்களில் சேர்க்கப்படுகிறார்கள். குறிப்பிட்ட நாட்களுக்குள் நிறுவனத்தின் வேறு ஏதாவது துறையில் பணிக்கு தகுதியானவர்கள் என்பதை அவர்கள் நிரூபிக்க வேண்டும், இல்லையெனில் ராஜினாமா செய்துவிட்டு செல்ல வேண்டும் என கூறப்படுகிறது.

மெட்டா நிறுவனத்தின் தனது வருவாய் தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருவதால், இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக நம்பப்படுகிறது. மே மாதம் மெட்டாவின் பங்கு $380 ஆக சரிந்தது. கடந்த ஒரு வருடத்தில் மெட்டா நிறுவனத்தின் பங்கு விலை சுமார் 60% குறைந்துள்ளது. வரவிருக்கும் பொருளாதார மந்தநிலை காரணமாக, ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனினும், இதுவரை மெட்டாவிடமிருந்து அதிகாரப்பூர்வமான பதில் எதுவும் வரவில்லை.

மேலும் படிக்க | Facebook issue: உங்கள் ஃபேஸ்புக் ஒழுங்காக வேலை செய்கிறதா? அநேகமாக இருக்காது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News