அமெரிக்காவின் தெற்கு அலாஸ்கன் கடற்கரை பகுதியில் 8.1 ரிக்ட்ர் அளவில் நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டு! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனையடுத்து அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.


இன்று காலை சுமார் 10.00 மணியளவில் கோடியக் பகுதியிலிருந்து, தென்கிழக்காக 300 கிமீ தொலைவில் இந்த நிலநடுக்கம் நிகழ்ந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


கலிஃபோர்னியா, பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் அலாஸ்காவின் கடலோர பகுதிகள் ஆகியவற்றில் இந்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் தேசிய வானிலை சேவை அறிவித்துள்ளது.


பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் அருகாமையில் உள்ள உயர்ந்த பகுதிகளுக்கு பாதுகாப்பு நலன் கருதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்!



பூகம்பத்தின் அளவுகோல்களை அடிப்படையாகக் கொண்டு, "பரந்த அபாயகரமான சுனாமி அலைகள் நிகழ வாய்ப்புள்ளது" என்று NWS பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது!