சீனா: இன்றைய நவீன யுகத்தில், உலகம் முழுவதும் தவழும் குழந்தைகள் முதல் தள்ளாடும் முதியவர்கள் வரை அனைவரது கைகளிலும் ஆண்ட்ராய்டு போன்கள் உள்ளன. பெரும்பாலான மக்களின் பொழுது போக்கு அம்சமாக திகழ்வது இணையதளங்கள் தான். குழந்தைகள் அதிகளவில் ஸ்மார்ட்போன்களில் ஆன்லைன் கேம்களில் தங்களது நேரத்தை செலவிட்டு வருவது வேதனையான ஒன்று .

COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போதைய சூழலில் குழந்தைகள் முதல் ஒரு குறிப்பிட்ட வயது வரை உள்ள இளைஞர்கள் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகி வருகின்றனர். இந்நிலையில் இதனை தடுக்கும் வண்ணம் சீனாவில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதனடிப்படையில், நாளை முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் வாரத்தில் மூன்று மணி நேரத்திற்கு மட்டுமே ஆன்லைன் விளையாட்டுகளை விளையாட வேண்டும் என்று அந்நாட்டு அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.குறிப்பாக சீனாவில் 18 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் ஆன்லைன் விளையாட்டுகளில் அதிக நேரங்களை செலவிடுவதாகவும், குறிப்பாக வார இறுதி நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் மட்டும் அதிகமான நேரத்தை ஆன்லைனில் விளையாட்டில் செலவிடுவதாகவும் அந்நாட்டு அரசுக்கு அறிக்கை மூலம் புகார் வந்தது. அதனை கட்டுப்படுத்தவே இது போன்ற அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து வீடியோ கேம்ஸ் நிறுவனமான நிக்கேய் ஆசியா அளித்த தகவலில், நாட்டில் இருக்கும் அனைத்து ஆன்லைன் வீடியோ கேம்ஸ் பயனாளர்களின் உண்மையான விவரங்களை சீன அரசு சமர்ப்பிக்க வலியுறுத்தி இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கல்வித் துறையிலும் சில மாறுதல்களை கொண்டு வர சீன அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி பீஜிங்கில் வெளிநாட்டு கல்வி சாதனங்களுக்கு தடை விதிக்கப்பட்டு சீன அதிபர் ஜின் பிங்கின் சோசலிசம் கருத்துக்களை முதன்மையாக ஆரம்பப் பள்ளிகள் , உயர்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அதை கற்றுக்கொடுக்க அரசு திட்டமிட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR