1996 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் இளவரசி டயானாவும், இளவரசர் சார்லஸும் முறையாக விவாகரத்து செய்தனர், ஒரு வருடம் கழித்து இளவரசி டயானா பாரிஸில் கார் விபத்தில் இறந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1995 ஆம் ஆண்டில், இளவரசி டயானா வழங்கிய பரபரப்பான நேர்காணல் குறித்த விசாரணை நடைபெற உள்ளது, இது அவரது திருமண வாழ்க்கையின் பிரச்சனைகளை முதல்முறையாக அம்பலப்படுத்தியது. பிபிசியை மேற்கோள் காட்டி இந்த செய்தி வெளிவந்துள்ளது
 
முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஜான் டைசன் விசாரணைக் குழுவை வழிநடத்துவார்.  மறைந்த இளவரசியின் சகோதரர் சார்லஸ் ஸ்பென்சர் முன்வைத்த அதிர்ச்சியூட்டும் குற்றச்சாட்டுகளுக்குப் பின்னர் இந்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த விவகாரத்தை விசாரிக்க முன்னாள் உச்சநீதிமன்ற (Supreme Court) நீதிபதியை நியமிக்கும் முடிவை டயானா மற்றும் சார்லஸின் மகன் இளவரசர் வில்லியம் வரவேற்றுள்ளார்.


நிருபர் மார்ட்டின் பஷீர் 'பனோரமா' என்ற நிகழ்ச்சியில் நேர்காணல்களை நடத்திய சார்லஸ் ஸ்பென்சர்,  தனது சகோதரியை நேர்காணலில் பங்கேற்க, போலி ஆவணங்களைக் காட்டி மிரட்டினார் என சார்லஸின் மகன் இளவரசர் வில்லியம் குற்றம் சாட்டியுள்ளார்.


அந்த நேரத்தில், பரபரப்பான நேர்காணலை இரண்டரை கோடிக்கும் அதிகமானோர் பார்த்திருந்தனர். 2.8 மில்லியன் பார்வைகளைக் கொண்ட இந்த நேர்காணலில், டயானா தனது இளவரசர் சார்லஸுடனான தனது திருமண வாழ்க்கையின் பிரச்சினைகளை  விரிவாக விவாதித்தார்.


மேலும் படிக்க | கிறிஸ்துமஸுக்கு முன்னர் கொரோனா தடுப்பூசி... Pfizer-BioNTech அறிவிப்பு..!!!


நேர்காணலின் போது, ​​தனது திருமணத்தில் 'மூன்று பேர்' இருந்ததாக அவர் கூறினார், சார்லஸ், அவரது நீண்டகால காதலி கமிலா பார்க்கர் மற்றும் தான் இருந்ததாக கூறிய அவர், அதே நேரத்தில் முன்னாள் காதலி தனக்கு விசுவாசமாக இல்லை என்பதையும் சார்லஸ் புரிந்து கொண்டார் எனவும் கூறியிருந்தார். 


1996 ஆம் ஆண்டில், டயானா மற்றும் சார்லஸ் முறையாக விவாகரத்து செய்தனர், ஒரு வருடம் கழித்து இளவரசி பாரிஸில் கார் விபத்தில் இறந்தார்.


மறைந்த இளவரசியை நேர்காணலுக்கு ஒப்புக் கொள்ள, பஷீர் சட்டவிரோத முறைகளைப் பயன்படுத்தியதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஒரு அறிக்கையில், "இது ஒரு முக்கியமான விசாரணை, இது முழுமையானதாகவும் நியாயமானதாகவும் நடப்பதை நான் உறுதி செய்வேன்" என்று கூறியுள்ளார். 


ALSO READ | விடுதலை புலிகளின் மாவீரர் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு இலங்கையில் தடை..!!! 


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR