`No Pants Subway Ride`- பேண்ட் அணியாமல் ரயிலில் பயணம் செய்யும் மக்கள்!
குறும்புத்தனமாக துவங்கிய இந்த `நோ பேண்ட்ஸ் சப்வே ரைட்` இப்போது ஒரு பாரம்பரியமாக மாறி வருகிறதாம்.
நியூயார்க்கிலிருந்து பாரிஸ் வரை: 2002 ஆம் ஆண்டில் நியூயார்க்கில் ஒரு குறும்புத்தனமாக துவங்கியது தான் 'No Pants Subway Ride'. ஆனால் இது இப்போது ஒரு பாரம்பரியம் ஆகிவிட்டதாம். காரணமே இல்லாமல் வெறும் பிரான்க்காக ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்வுக்கு இன்று உலகின் பல்வேறு நகர்களை சேர்ந்த மக்கள் ஆதரவளித்து அரைநிர்வாண கோலத்தில் ரயிலில் பயணித்து வருகின்றனர். இதில், அப்பாடி என்ன ஒரு கொண்டாட்டம் இருக்கிறதோ....
No Pants Subway Ride (அ) No Trousers on the Tube Ride என்றும் இந்த நிகழ்வு உலகின் சில பகுதிகளில் நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியின் போது, இதில் பங்குபெறுபவர்கள் பேண்ட் அணியக் கூடாது என்பதே விதிமுறை. இம்ப்ரோவ் எவ்ரிவேர் (Improv Everywhere) என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் தான் இப்படி ஒரு விசித்திரமான நிகழ்வை வருடா வருடம் நடத்தி வருகிண்டனர். இது போன்ற நிகழ்வு உலகின் பல்வேறு நகர்களில் நடத்தப்பட்டு வருகிறது.
No Pants Subway Ride எனப்படும் இந்த நிகழ்வு எப்போது எங்கே நடத்தப்படும் என்ற அறிவிப்புகள் Improv Everywhere என்ற அமைப்பின் இணையத்தளத்தில் வெளியிடப்படுகிறது. இவர்கள் எங்கே, எந்த நாளில் என்பதை டிசம்பர் மாத ஆரம்பத்தில் கூறிவிடுவார்கலாம். இந்த நிகழ்வு ஒவ்வொரு ஆண்டின் ஜனவரி மாத துவக்கத்தில் நடத்தப்படுமாம்.
இந்த No Pants Subway Ride எனும் நிகழ்வு கடந்த 2002-ல் இருந்து நடத்தப்பட்டு வருகிறது. முதல் முறையாக நியூயார்க் நகரில் தான் நடத்தினார்கலாம். பிறகு, 2006-ல் நியூயார்க் நகரத்தில் நடந்த போது 150 பேர் கலந்து கொண்டார்களாம். அப்போது ஒழுக்கமற்ற வகையில் நடந்துக் கொண்டதாக எட்டு பேர் மீது புகார் அளிக்கப்பட்டதால். அந்த எட்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பிறகு அவர்களுக்கு அபராதம் விதித்து அவர்களை விடுவித்துள்ளனர்.
இந்த வருடமும் No Pants Subway Ride நியூயார்க் நகரில் நடந்தது. இது நியூயார்க் நகரில் நடக்கும் 17-வது No Pants Subway Ride நிகழ்வு ஆகும். கிட்டத்தட்ட நூற்றுக்கணக்கானோர் பேண்ட் அணியாமல், மெட்ரோவில் பயணித்து கொண்டாடியுள்ளனர்.
Bomb Cyclone என்ற சூறாவளி தாக்கம் ஏற்பட்ட மறுநாளே இந்த No Pants Subway Ride கொண்டாட்டத்தில் நூற்றுக் கணக்கானோர் கலந்துக் கொண்டது மற்றவர்களை வியப்படைய வைத்துள்ளது. கால் அளவுக்கு பனிபொழிவு இருந்தும் கூட எதையும் பொருட்படுத்தாமல் இவர்கள் இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டுள்ளனர். இந்த முறை யூனியன் ஸ்கொயர் ஸ்டேஷனில் இந்த நிகழ்வு நடந்தது.