கொரோனா வைரஸ் தொற்றுநோய் உலகம் முழுவதும் லட்சக் கணக்கான மக்களின் உயிரைப் பறித்தது, மேலும் லட்சக்கணக்கான மக்கள் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டனர். இந்த வைரஸ் காரணமாக, பெரும்பாலான நாடுகள் லாக்டவுனை விதிக்க வேண்டியிருந்தது. பல நாடுகளின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.  கொரோனா சிலர் தங்கள் உயிரையும், பலர் வேலை, தொழிலை இழந்துள்ளனர். இருப்பினும், உலகில் யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படாத ஒரு இடம் உள்ளது என்பதை  அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இங்கு யாருக்கும் கொரோனா ஏற்படவில்லை


கொரோனா வைரஸ் (Corona Virus) உலகில் பரவியபோது, ​​மக்கள் மாஸ்க் அணியவும், சமூக விலகல் கடைபிடிக்கவும், சானிடைசர் பயன்படுத்தவும், வீடுகளில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டனர். தடுப்பூசி வந்த பிறகு, மக்களிடையே கொரோனா பயம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தாலும், இரண்டாவது அலை குறித்த பயம் இன்னும் மக்கள் மனதில் உள்ளது. கொரோனா வராத இடத்துக்குப் போக வேண்டும் என்ற எண்ணம் பலரின் மனதில் தோன்றியிருக்கும். யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படாத ஒரு இடத்தை பற்றி அறிந்து கொள்ளலாம்.


ALSO READ | Five Star Prison: கைதியானால், ‘இந்த’ சிறைச்சாலைகளில் கைதியாக இருக்க வேண்டும்...!


இங்கிலாந்தின் இந்தத் தீவில் கொரோனா பாதிப்பை ஏற்படுத்தவில்லை


UK அருகில் ஒரு தீவு உள்ளது, அங்கு கொரோனா வைரஸ் தொற்றால் ஒருவர் கூட  பாதிக்கப்படவில்லை. மக்கள் இப்போது இந்த தீவை பூஜ்ஜிய கொரோனா தொற்று கொண்ட தீவாக அங்கீகரிக்கின்றனர். nzherald.co.nz என்ற தளத்தில் வெளியான செய்தியின்படி, இந்த தீவின் பெயர் Saint Helena Island என்பதாகும். 2019 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை, உலகில் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தீவில், ஒரு கொரோனா தொற்று பாதிப்பு  கூட பதிவாகவில்லை. இந்த தீவு 121.7 கிமீ² பரப்பளவில் பரவியுள்ளது. இந்த தீவின் மக்கள் தொகை சுமார் 5000 ஆகும்.


கோவிட் நெறிமுறை எதுவும்  பின்பற்றப்படவில்லை


செயின்ட் ஹெலினாவைப் பற்றிய மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இங்கு கோவிட் விதிகள் எதுவும் பின்பற்றப்படவில்லை, ஏனென்றால் கொரோனா இங்கு ஏற்படவேயில்லை. இங்கு மக்கள் எப்போதும் போல் இயல்பு வாழ்க்கை நடத்தி வருகின்றனர். மாஸ்க் அணியவில்லை, சமூக இடைவெளியோ தேவையில்லை. இருப்பினும், வெளியில் இருந்து வருபவர்கள் கோவிட் நெறிமுறைகளைப் பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறார்கள்.


ALSO READ | இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் வெற்றி இஸ்லாமின் வெற்றி: பாகிஸ்தான் அமைச்சர்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR