டோக்கியோ: இன்றுகாலை சுமார் 6 மணியளவில் புகுஷிமா நகரையொட்டியுள்ள பசிபிக் பெருங்கடலில் 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து புகுஷிமா அணுஉலை அடங்கிய பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிலநடுக்கத்தின் விளைவாக கடலில் ஆர்ப்பரித்து எழும்பிய பேரலைகள் புகுஷிமா டாய்ச்சி அணு மின்நிலையத்தை தாக்கியதாகவும், இந்த அலைகள் ஒவ்வொன்றும் ஒருமீட்டருக்கும் அதிகமான உயரத்தில் எழுந்து சீறிப்பாய்ந்து வந்ததாகவும் ஜப்பானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.


உலகின் மிக மோசமான அணு பேரழிவுகளை சந்தித்த புகுஷிமா அணுமின் நிலையம் அமைந்து உள்ளபகுதிக்கு மீண்டும் ஒரு எச்சரிக்கையானது விடுக்கப்பட்டுள்ளது. புகுஷிமா அணுஉலை அருகே நிலநடுக்கம் உணரப்பட்டதால் அங்குள்ள மக்கள் பெரிதும் அச்சத்திற்கு உள்ளாகிள்ளனர். நிலநடுக்கத்தை அடுத்து அப்பகுதியில் கட்ட‌‌‌டங்‌கள் கு‌லுங்கின. புகுஷிமாவிலிருந்து 60 கி.மீ. தொலைவில் நிலநடுக்கத்தால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என்று செய்திகள் வெளியாகி உள்ளது. 


இந்த நிலநடுக்கமானது நியூசிலாந்திலும் உணரப்பட்டு உள்ளது. இதற்கிடையே ஜப்பானின் வடக்கு கடற்கரைப் பகுதியில் கடல் அலைகள் அதிக உயரத்திற்கு மேல் எழும்பி காணப்பட்டதாகவும் செய்தி வெளியாகிள்ளது.
 


7.3 ரிக்டர் அளவுக்கோலில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியது. கடந்த 2011-ம் ஆண்டு மிகப்பெரிய நிலநடுக்கம் கடலுக்கு அடியில் ஏற்பட்டது. ஜப்பானின் வடகிழக்கு கடற்பகுதியை சுனாமி அலைகள் தாக்கின. இந்த சம்பவத்தில் 18,000 த்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர், புகுஷிமாவில் மூன்று உலைகள் பாதிப்புக்கு உள்ளாகியது. 


இப்போது எச்சரிக்கை விடப்பட்டதை தொடர்ந்து அந்நாட்டு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.