EctoLife: வருகிறது செயற்கை கருப்பை... அறிவியலின் புதிய படைப்பு!
எக்டோலைப் (EctoLife) என்ற தனியார் நிறுவனம் ஒன்று ஒவ்வொரு ஆண்டும் `செயற்கை கருப்பை` மூலம் ஆய்வகத்தில் 30,000 குழந்தைகள் பிறக்க வைக்க முடியும் என கூறுகிறது.
இயந்திரங்கள் மற்றும் கேஜெட்களின் முக்கியத்துவம் மனித வாழ்க்கையில் நீண்ட காலத்திற்கு முன்பே ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்து விட்டது. எதிர்காலத்தில் இயந்திரங்கள் மூலம் என்ன என்ன நடக்கும் என்று கணிப்பது கடினம். அந்த வகையில் இப்போது செயற்கை கருப்பை மூலம் குழந்தைகளை பிறக்க வைக்க முடியும் என்று எக்டோ லைப் (EctoLife) என்ற தனியார் நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. இது தான் உலகில் செயற்கையாக உருவாக்கப்பட்ட முதல் கருவறை நிறுவனம் என்றும் கூறப்படுகிறது. எக்டோலைப் (Ecto Life) நிறுவனம் பெர்லினை தலைமையகமாகக் கொண்ட உயிரி தொழில்நுட்பவியல் நிறுவனம். இந்த நிறுவனம் தான் உலகின் முதல் செயற்கை கருப்பை முறையில் குழந்தையை உருவாக்கும் முறையை அறிமுகப்படுத்துகிறது. வருங்காலத்தில் தாய் கர்ப்பமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. பிரசவம் அல்லது அறுவை சிகிச்சை போன்ர வலிகளில் இருந்து பெண்கள் விடுதலை அடைவார்கள்
எக்டோலைஃப், 'உலகின் முதல் செயற்கை கருவூட்டல் வசதி' என்பது குழந்தைகளை பெற்றெடுக்க பெற்றோர்களுக்கு இது ஒரு வசதியாக வழிமுறையை வழங்குகிறது. பெண்களின் கருப்பை போலவே செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ள கருப்பை அமைப்புகள் மூலம் வருடத்திற்கு 30,000 குழந்தைகளை உருவாக்க முடியும் என்று எக்டோலைஃப் நிறுவனம் கூறுகிறது. இதில் உள்ள ஒவ்வொரு செயற்கை கருப்பைகளிலும் குழந்தையின் இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம், வெப்பநிலை, சுவாசம் உள்ளிட்ட முக்கிய உயிர்காக்கும் அம்சங்களை கண்காணிக்கும் சென்சார்கள் பொருத்தப்பட்டிருக்கும். இது தொடர்பான வீடியோவையும் எக்டோலைப் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்க | உண்மை காதலுக்கு வயதில்லை... 52 வயது பெண்மணியை மணந்த 21 வயது இளைஞன்!
ஒரு வருடத்தில் 30,000 கருக்களை வளர்க்கும் திறன் கொண்டது
உலகெங்கிலும் உள்ள ஆராய்ச்சியாளர்களின் ஐம்பது ஆண்டுகால 'முன்னோடியில்லாத அறிவியல் ஆராய்ச்சி'யின் அடிப்படையில் ActoLife கருத்து உள்ளது, அல்-கைலி கூறுகிறார். ஒரு ஆய்வகத்தில் வெளிப்படையான 'வளர்ச்சி காய்களில்' ஆண்டுக்கு 30,000 குழந்தைகளை வளர்க்க முடியும். மக்கள் தொகை தொடர்ந்து குறைந்து கொண்டிருக்கும் ஜப்பான், பல்கேரியா மற்றும் தென் கொரியா போன்ற நாடுகளுக்கு இது பெரிதும் உதவும் என்றும், உடல் நல பாதிப்புகள் மற்றும் கருப்பை பாதிப்புகளால், குழந்தை பெற்றுக் கொள்ள முடியாமல் இருக்கும் பெண்களுக்கு இது வரப்பிரசாதமாக அமையும் எனவும் கூறப்படுகிறது. EctoLife வசதி புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் இயங்கும். இதன் கீழ் 75 ஆய்வகங்கள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு ஆய்வகத்தில் 400 செயற்கை கருப்பை இருக்கும்.
பெற்றோர்கள் குழந்தையின் வளர்ச்சியை தொடர்ந்து கண்காணிக்க முடியும்
தாயின் வயிற்றில் இருக்கும் சூழலுக்கு நிகரான சூழலை வழங்கும் வகையில் இந்த செயற்கை கருப்பைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. செயற்கை கருப்பையுடன் இணைக்கப்பட்டுள்ள திரை மூலம் பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் வளர்ச்சி மற்றும் வளர்ச்சியை கண்காணிக்க முடியும். இந்த தகவல்களை போனில் உள்ள ஆப் மூலமாகவும் கண்காணிக்க முடியும். குழந்தை பெற்றுக் கொள்ள இயலாதவர்களுக்கு, வாடகைத் தாய், செயற்கை கருவூட்டல் போன்ற வசதிகள் தற்போது உள்ள சூழலில் எக்டோ லைப்பின் இந்த அறிவிப்பு சமூக வலைதளங்களில் பெரிய அளவில் பேசு பொருளாகியுள்ளது. எனினும் இது எதிர்காலத்தில் நிச்சயம் சாத்தியமாகும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க | நண்பேண்டா... மானுக்கு ‘கிளை’ கொடுத்த குரங்கு... இணையவாசிகள் மனம் கவர்ந்த வீடியோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ