உலகின் மிக நீண்ட லாக்டவுன்.. இனியாவது நிவாரணம் கிடைக்குமா என ஏங்கும் மக்கள்..!!
உலகளாவிய தொற்று நோயான கொரோனா தொற்று பரவலை தவிர்க்க, பெரும்பாலான நாடுகள் லாக்டவுனை அறிவித்தன.
புது தில்லி: உலகளாவிய தொற்றுநோயான கொரோனா வைரஸ் அனைவரின் வாழ்க்கையை கடுமையாக பாதித்துள்ளது. இதைத் தவிர்க்க, உலகின் அனைத்து நாடுகளும் மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு லாக்டவுன் போன்ற அனைத்து கட்டுப்பாடுகளையும் விதித்தன. இருப்பினும், தடுப்பூசி போட தொடங்கியதிலிருந்து, கிட்டத்தட்ட எல்லா நாடுகளிலும் கொரோனா பாதிப்புகள் குறைந்து வருகின்றன. இதைக் கருத்தில் கொண்டு, அனைத்து நாடுகளும் படிப்படியாக கட்டுபாடுகளை தளர்த்தி வருகின்றன.
உலக நாடுகளில், ஆஸ்திரேலிய மக்கள் மிக நீண்ட லாக்டவுனை எதிர்கொண்டனர். தற்போது, சமீபத்திய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அங்கு கொரோனா கட்டுப்பாடுகள் விரைவில் நீக்கப்படும் என தகவல்வெளியாகியுள்ளது.
அனைத்து கட்டுப்பாடுகளும் இந்த வார இறுதிக்குள் நீக்கப்படும் என்று மெல்போர்ன் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். மார்ச் 2020 நிலவரப்படி, ஐந்து மில்லியன் ஆஸ்திரேலியர்கள் சுமார் ஒன்பது மாதங்கள் அல்லது 262 நாட்களுக்கு ஆறு முறை லாக்டவுன் காரணமாக வீடுகளில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆஸ்திரேலிய மற்றும் பிற ஊடக அறிக்கைகளின்படி, அர்ஜென்டினா தலைநகர் புவெனஸ் அயர்ஸில் 234 நாட்கள் லாக்டவுன் நீடித்த நிலையில், ஆஸ்திரேலியா தான் உலகிலேயே மிக நீண்ட லாக் டவுனை அறிவித்த நாடாக ஆகியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் கொரோனா அச்சுறுத்தல் இன்னும் முழுமையாக நீங்காததால், நிலைமையை இயல்பாக்குவதற்கும் மேம்படுத்துவதற்கும், இந்த வாரம் கொரோனா தடுப்பூசி போடும் பணி மிகவும் தீவிரபடுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ALSO READ | Covid தடுப்பூசி உற்பத்தி-விநியோகத்தில் இந்தியா அபாரம் - உலக வங்கி பாராட்டு
ஆஸ்திரேலியாவில் கொரோனாவின் சமீபத்திய புள்ளிவிவரங்களைப் பற்றி பேசுகையில், அங்கு 1838 புதிய கோவிட் தொற்று பாதிப்புகள் ஞாயிற்றுக்கிழமை பதிவாகியுள்ளன, இது தவிர ஏழு பேரும் இறந்துள்ளனர். ஆஸ்திரேலியாவின் 80 சதவீத மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டவுடன், லாக்டவுன் விலக்கிக் கொள்ளப்படலாம். நியூசிலாந்தின் தெற்கு தீவில் ஒரு கொரோனா தொற்று கூட இல்லை என்று ஆஸ்திரேலியாவின் சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.
ஆஸ்திரேலிய அரசு, சிங்கப்பூர் அரசாங்கத்துடன் தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையேயான பயணத்தைத் தொடர்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இருப்பினும், ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் இடையேயான பயணம் பொதுமக்களுக்கு தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்ற பயணிகளுக்கு மட்டுமே சாத்தியமாகும். சமீபத்தில், ஆஸ்திரேலியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது, ஆனால் சில வளர்ந்த நாடுகளை விட ஆஸ்திரேலியாவில் குறைவான கொரோனா தொற்று பாதிப்புகள் உள்ளன.
ALSO READ | Molnupiravir: கொரோனா சிகிச்சையில் முக்கிய மைல்கல்லாக இருக்குமா..!!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR