புது தில்லி. உலகில் பல விசித்திரமான மற்றும் சபிக்கப்பட்ட விஷயங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று வட கொரியாவில் உள்ள ஹோட்டல். வட கொரியாவில் ஒரு ஹோட்டலை   'சபிக்கப்பட்ட' ஹோட்டல் என்றும், 'பேய்' ஹோட்டல் என்றும் அழைக்கின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேற்புறம் கூர்மையான வடிவமைப்புடன் பிரமிட் வடிவில் மிகவும் அழகாக விண்ணைத் தொடுவதைப் போல் தோற்றமளிக்கும் கட்டடம் இது.


ஆனால், கட்டடம் கட்டத் தொடங்கி 33 ஆண்டுகள் ஆனாலும் இந்த ஹோட்டலின் கட்டுமானம் முழுமையடையவில்லை இந்த ஹோட்டலின் அதிகாரப்பூர்வ பெயர் ருக்யோங் (Ryugyong), இது யூ-கியுங் (Yu-Kyung) என்றும் அழைக்கப்படுகிறது.


105 அறைகள் கொண்ட ஹோட்டல்
வட கொரியாவின் தலைநகர் பியோங்யாங்கில் அமைந்துள்ள இந்த ஹோட்டல் 330 மீட்டர் உயரமும், 105 அறைகளையும் கொண்டுள்ளது. இந்த ஹோட்டல் மிகவும் பிரமாண்டமாகவும், வெளியில் இருந்து பார்க்கும்போதே மிகவும் ஆடம்பரமானதாகவும் இருக்கிறது. வட கொரியாவில் உள்ளவர்கள் இந்த ஹோட்டலை 'பேய் கட்டிடம்' என்று அழைக்கிறார்கள்.


ஹோட்டலுக்கு செலவிடப்பட்டத் தொகை 55 டிரில்லியன் ரூபாய் 
ஜப்பான் ஊடகங்கள் கொடுக்கும் தகவல்களின்படி, இந்த ஹோட்டலைக் கட்டுவதற்கு வட கொரிய அரசு நிறைய பணம் செலவிட்டுள்ளது. தொகையைக் கேட்டால், இந்த ஹோட்டலைப் போலவே வானளாவிய அச்சம் தோன்றுகிறது. வட கொரிய அரசு சுமார் 55 டிரில்லியன் ரூபாய் செலவிட்டாலும் இன்றுவரை ஹோட்டலின் கட்டுமானம் முடிக்கப்படாமல், அரைகுறையாகவே இருக்கிறது. 


கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்ற ஹோட்டல் 


'பூமியில் மிக உயரமான வெறிச்சோடிய கட்டிடம்' என்று உலகம் அறிந்திருக்கும் இந்த ஹோட்டலின் பெயர் கின்னஸ் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஹோட்டல் கட்டி முடிக்கப்பட்டால் உலகின் மிக உயரமான கட்டடங்களின் பட்டியலில் ஏழாவது இடத்தைப் பெறும். உலகின் மிக உயரமான மற்றும் ஆடம்பரமான ஹோட்டல் என்றும் அறியப்படும்.


1987 இல் தொடங்கியது பேய் ஹோட்டலின் கட்டுமானம்


இந்த ஹோட்டலின் கட்டுமானம் 1987 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால், கட்டடம் கட்டத் தொடங்கியதில் இருந்தே அதன் கட்டுமானத்தில் பல சிக்கல்கள் இருந்தன. குறிப்பிட்ட இரண்டு ஆண்டுகளுக்குள் கட்டி முடிக்கப்படாமல், காலம் நீட்டித்துக் கொண்டே சென்றும் பணிகள் முடிவடையவில்லை. பிறகு கட்டுமானம் 1992 இல் நிறுத்தப்பட்டது. மீண்டும் கட்டடத்தை கட்டும் பணி 2008 ஆம் ஆண்டில் மீண்டும் தொடங்கப்பட்டது. இதற்காக 11 பில்லியன் ரூபாய் செலவிடப்பட்டது. இருப்பினும் ஹோட்டலின் கட்டுமான பணிகள் முடிவடையவில்லை.


பூமியில் மிக உயரமான கட்டடம் என்றால், அதைப் பார்ப்பதற்கு மக்கள் கூட்டம் அலைமோதுவது தானே இயல்பு? ஆனால் இந்த அதிசய அபூர்வ கட்டடமாக இருந்தாலும், மனிதர்கள் இங்கு செல்ல பயப்படுகிறார்கள். பேய் ஹோட்டல் என்றால் இலவசமாக அழைத்துச் சென்றாலும் யாரும் மாட்டார்களே!


Read Also | 76 குழந்தைகளை கண்டுபிடித்து பெற்றோருடன் சேர்த்து வைத்த பெண் போலீஸ் அதிகாரிக்கு Salute 


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR