உலகை உலுக்கிய செப்டம்பர் 11 தாக்குதல்; அமெரிக்காவின் நோக்கம் நிறைவேறியதா..!
அமெரிக்காவை மட்டுமல்ல, உலகத்தியே அதிர்ச்சிக்குள்ளாக்கிய, பயங்கரவாத சம்பவத்தின் 20 ஆண்டுகள் நிறைவு தினம் இன்று.
அமெரிக்காவை மட்டுமல்ல, உலகத்தியே அதிர்ச்சிக்குள்ளாக்கிய, பயங்கரவாத சம்பவத்தின் 20 ஆண்டுகள் நிறைவு தினம் இன்று. 2001 செப்டம்பர் 11 அன்று காலை 8.45 மணிக்கு, அல் கொய்தா பயங்கரவாதிகள் உலக வர்த்தக மையத்தின் மீது விமானங்களை மோதியதில், அதன் இரண்டு கோபுரங்களும் சீட்டு கட்டை போல் நொறுங்கி விழுந்தன. நியூயார்க்கில் இரட்டைக் கோபுரத்தை அல்காய்தா பயங்கரவாத அமைப்பு, தாங்கள் கடத்திய விமானங்களை கொண்டு மோதி தகர்த்தது. இரண்டு விமானங்கள் இரட்டை கோபுரம் மீது மோதிய நிலையில், மூன்றாவது விமானம் அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பெண்டகன் மீது மோதியது. இந்த தாக்குதலுக்கு அல் கய்தா இயக்கத்தின், ஒசாமா பின் லேடன் பொறுப்பேற்றார்.
2,983 பேரை பலிகொண்ட பயங்கரவாத தாக்குதலால் அமெரிக்கா நிலைகுலைந்தது. இந்த தாக்குதலுக்கு பின் அமெரிக்கா பயங்கரவாத எதிர்ப்பு போரை தொடங்கியது. அதில் முக்க்கிய நடவடிக்கையாக, 2011, மே முதல் தேதியன்று, பாகிஸ்தானில் பதுங்கி இருந்த, ஒசாமா பின் லேடனை, அமெரிக்காவின் பிளாக் ஹாக் ஹெலிகாப்டர்களில் சென்ற சுமார் 20 வீரர்கள், பின் லேடன் வீட்டு மாடியில் தரையிறங்கி அவரை சுட்டு வீழ்த்தினார்கள்.
அமெரிக்கவின் மீதான தாக்குதலுக்கு பிறகு அல்கொய்தா மற்றும் ஹக்கானி நெட்வொர்க் ஆகியவை ஒரே இரவில் அமெரிக்காவின் எதிரிகளாக மாறினார்கள். ஆனால் துரதிருஷ்டவசமாக, அமெரிக்கா, தனது 20 ஆண்டு கால போருக்கு பிறகு, ஆப்கானிஸ்தானின் கட்டுப்பாட்டை அதன் எதிரிகளான தாலிபான் (Taliban) மற்றும் ஹக்கானி குழுவில் ஒப்படைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலில், நேரிடையாக உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 3000. ஆனால் 75000 க்கும் மேற்பட்ட ஆப்கானிஸ்தான் வீரர்கள், 3000 க்கும் மேற்பட்ட கூட்டணிப் படையினர், மற்றும் பாதிக்கப்பட்ட எட்டு லட்சத்துக்கும் மேற்பட்ட சிவில் மக்கள் என இந்த இந்த இருபது ஆண்டு போரில் விட்டு சென்றுள்ள தடயங்கள் ஏராளம். "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்று தனது நாட்டு மக்களின் வரிப் பணத்தை கொண்டு பெரும் விலை கொடுத்த அமெரிக்கா, இப்போது பயங்கரவாதிகளின் பிடியில் ஆப்கானிஸ்தானை (Afghanistan) விட்டுச் சென்றுள்ளது.
ALSO READ | அதிர்ச்சித் தகவல்! பெண்ணின் சடலங்களுடனும் உடல் உறவு கொள்ளும் தாலிபான்கள்..!!
ஆப்கானிஸ்தானில், அமெரிக்கா மீதான பயங்கரவாத தாக்குதலுக்காக, அல்கெய்தா பயங்கரவாதவாதிகளை அழிக்க களம் இறங்கிய அமெரிக்கா, இந்த 20-ம் ஆண்டு நினைவு தினத்தில், ஆப்கானிஸ்தானில் இருந்து முழுமையாக வெளியேறி விட்டது. ஆனால், இன்று ஆப்கானிஸ்தான், அதே பயங்கரவாதத்தின் பிடியில் சிக்கியுள்ளது. அந்நாடு, தாலிபான்களின் பிடியில் சிக்கியிருப்பதோடு, உலகிற்கே அவர்கள் அச்சுறுத்தலாக மாறியுள்ளனர்.
பயங்கரவாதத்திற்கு எதிராக அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் தொடங்கிய போர், அதிகாரபூர்வமாக முடிந்துவிட்டாலும், தற்போது ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் கொடுங்கோல் ஆட்சி தொடங்கி அங்கு மிக மோசமான சூழ்நிலை நிலவுகிறது.
ALSO READ | Haibatullah Akhunzada: இவர் தான் ஆப்கானின் சுப்ரீம் லீடர் என அறிவித்த தாலிபான்
இரட்டை கோபுர தாக்குதலுக்கு காரணமான அல்கொய்தா தீவிரவாதிகளை அழிக்க உறுதி பூண்ட அமெரிக்க அல் கொய்தா தீவிரவாதிகளுக்கு, ஆப்கானிஸ்தானில் அடைக்கலம் கொடுத்திருந்த தலிபான்கள் (Taliban) மீது போர் தொடுத்து, அவர்களின் ஆட்சியை அமெரிக்க படைகள் அகற்றின. பின் ஜனநாயக ரீதியிலான அதிபர் தேர்தல் நடத்தி , புதிய அரசியலமைப்புச் சட்டம் நிறுவப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | Viral Pics: தாலிபான் ஆட்சிக்கு முன் ஆப்கானில் சுதந்திர பறவைகளாக இருந்த பெண்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR