ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக தாலிபானுக்கு எதிராக மேற்கொண்ட போர் முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்கா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அமெரிக்க ராணுவத்தின் கடைசி விமானம் காபூலில் உள்ள ஹமீது கர்சாய் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்றது.
ஆப்கானிஸ்தானை (Afghanistan) விட்டு வெளியேறிய கடைசி அமெரிக்க படை வீரர்- மேஜர் ஜெனரல் கிறிஸ் டோனாஹு (Chris Donahue), ஆகஸ்ட் 30 அன்று C-17 விமானத்தில் ஏறிய நிலையில், காபூலில் அமெரிக்க பணி முடிவடைந்தது என்று அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் ட்வீட் செய்துள்ளது.
கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இரட்டை கோபுரத்தை அல்கொய்தா தீவிரவாதிகள் தகர்த்தனர். அந்தத் தாக்குதலுக்கு காரணமான அல்கொய்தா தீவிரவாதிகளை அழிக்க அமெரிக்க உறுதிபூண்டது. அல் கொய்தா தீவிரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தானில் அடைக்கலம் கொடுத்திருந்த தலிபான்கள் (Taliban) மீது போர் தொடுத்து, அவர்களின் ஆட்சியை அமெரிக்க படைகள் அகற்றின. பின் ஜனநாயக ரீதியிலான அதிபர் தேர்தல் நடத்தி , புதிய அரசியலமைப்புச் சட்டம் நிறுவப்பட்டன.
ALSO READ | அதிர்ச்சித் தகவல்! பெண்ணின் சடலங்களுடனும் உடல் உறவு கொள்ளும் தாலிபான்கள்..!!
இன்று ஆப்கனை விட்டு அமெரிக்க ராணுவம் கிளம்பும் நிலையில், பல அமெரிக்கர்கள் இன்னும் அங்கு சிக்கியிருப்பதாக கூறப்படுவது, அமெரிக்காவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தாலிபான்களை எதிர்த்து போர் புரிந்து வந்த அமெரிக்கா, இப்போது, முறையான திட்டமிடல் இல்லாமல், தாலிபான்களிடம் இருந்து தப்பியோடும் நிலை ஏற்பட்டுள்ளதாக ஜோ பைடன் மீது அதிருதிகள் உருவாகின்றன. அமெரிக்கா தனது மக்களையே முழுக்க மீட்க முடியாமல் உள்ளது என அந்நாட்டில் பெரிய அளவில் அதிருப்தி எழும்புகின்றன.
மேலும், லட்ச கணக்கான ராணுவ கருவிகள் மற்றும் உபகரணங்களை ஆஃப்கானிஸ்தானிலேயே விட்டு விட்டு அமெரிக்கா வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது உலகிற்கு அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா விட்டுச்செல்லும் மதிப்பு மாத்திரமே 15,000 கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. உலகின் அதி நவீன ஸ்டெல்த் தொழில்நுட்பம் கொண்ட 32 பிளாக் ஹாக் ஹெலிகாப்டர்கள் உட்பட பல நவீன் ஆயுதங்கள் தற்போது தாலிபான்களிடம் உள்ளன. இது உலகிற்கே பெரும் அச்சுறுத்தல்.
ALSO READ | சீக்கிய புனித நூலை சுமந்து கொண்டு தில்லி வந்தடைந்த ஆப்கான் சீக்கியர்கள்
இந்தியாவை பொறுத்தவரை, இந்த ஆயுதங்கள் பாகிஸ்தான் வசம் செல்லும் வாய்ப்பு உள்ளதால் கூடுதல் அச்சுறுத்தல் உள்ளது. சில பாகிஸ்தான் உளவு அமைப்புகள் ஆப்கானில் ஊடுருவி, அமெரிக்க ராணுவ சாதனங்கள் சிலவற்றை கைப்பற்றிவிட்டதாக வரும் செய்திகள் கவலைகளை கொடுப்பதாக உள்ளது. எனினும் இந்தியா, கூடுதல் எச்சரிக்கையும், நீர், ஆகாயம், தரை ஆகிய அனைத்து தரப்பிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளதாக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க நாட்டை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் இன்னமும் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற முடியாமல் தவித்துக் கொண்டு இருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன.
ALSO READ | Viral Pics: தாலிபான் ஆட்சிக்கு முன் ஆப்கானில் சுதந்திர பறவைகளாக இருந்த பெண்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR