ஜார்ஜியா மாகாணத்தில் 2 வயது குழந்தை வீட்டில் இருந்த நிஜ துப்பாக்கியில் விளையாடிய போது மரணம்.... 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் 2 வயது குழந்தை தனது தந்தைக்கு சொந்தமான துப்பாக்கியை வைத்து வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக துப்பாக்கி வெடித்து, குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  


துப்பாக்கி கலாச்சாரம் அதிகம் ஓங்கியிருக்கும் அமெரிக்காவில், பல்வேறு குடும்பங்கள் தங்களது வீட்டிலேயே பாதுகாப்புக்காக துப்பாக்கிகளை வைத்திருப்பது வழக்கம். இந்த வழக்கத்தால் குழந்தைகள் விளையாட்டு துப்பாக்கி என்று நிலைத்து பலியாகும் சம்பவங்களும் அங்கு அதிகமாகியுள்ளது. இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள ஜோன்ஸ்போரோ என்ற ஊரில், ஒரு குழந்தை துப்பாக்கி குண்டு பட்டு காயமடைந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. 


அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, இரண்டு வயது சிறுவன், துப்பாக்கியால் சுடப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரித்த போது, அந்த இரண்டு வயது சிறுவன், தனது தந்தையின் அறைக்குள்ளே சென்று அவரது தலையணைக்கு அடியில் இருந்த துப்பாக்கியை எடுத்து விளையாடியுள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக துப்பாக்கி அந்த சிறுவனை நோக்கி வெடித்து, பரிதாபமாக பலியானதாக குழந்தையின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 


அவசர உதவிக்குழு, அந்த குழந்தையை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அந்த குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்வதா வேண்டாமா என போலீசார் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.