கடந்த வார இறுதியில் டோங்காவில் 49 அடி சுனாமி அலை தாக்கியதாக அந்நாட்டு அரசு இன்று (ஜனவரி 19, 2022, புதன்கிழமை) தெரிவித்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பசிபிக் தீவு நாடான டோங்காவில் நீருக்கடியில் எரிமலை வெடித்ததில் சுனாமி ஏற்பட்டது. டோங்காவின் மேற்குக் கடற்கரையில் பெரிய அளவிலான சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 


இந்த மாபெரும் சுனாமியால் குறைந்தபட்சம் மூன்று பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்பு நடவடிக்கைகளுக்கு பிறகு பலி எண்ணிக்கை (Death Toll)  அதிகரிக்கலாம்.


இதுவரை கண்டிராத மிகப்பெரிய பேரழிவு சுனாமி டோங்காவைத் தாக்கியது" என்று அரசாங்கம் கூறியது, எரிமலை தீவு நாட்டை சுனாமி தாக்கிய சில நாட்களுக்குப் பிறகுதான் மீட்பு நடவடிக்கைகள் தொடங்க முடிந்தது.


ALSO READ | சுனாமியால் பாதிக்கப்பட்ட டோங்கா!


ஒரு கிராமமே முற்றிலுமாக அழிந்துவிட்டதாக அறிக்கைகள் கூறுகின்றன. விமான நிலையம் (International Airport) மூடப்பட்டுள்ளது, எரிமலை வெடிப்பினால் பலர் காயமடைந்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது


சுனாமி தாக்குதலுக்குப் பிறகு தீவு டோங்காவுடனான தகவல் தொடர்புத் துண்டிக்கப்பட்டதால் மீட்புப் பணிகள் தாமதமாகின. தற்போது சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் மீட்புப் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 


கடலுக்கடியில் உள்ள கேபிள்களை சரி செய்ய குறைந்தது ஒரு மாதமாவது ஆகும் என்று நியூசிலாந்து அரசு தெரிவித்துள்ளது.



இன்னும் அணுக முடியாத பல தொலைதூர தீவுகளில் நூற்றுக்கணக்கான வீடுகளை இந்த இயற்கை பேரிடர் (Natural Calamity) அழித்துவிட்டதாகாவும், சேதங்கள் இன்னும் மதிப்பிடப்பட முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.


டோங்காத் தீவு சாம்பலால் மூடப்பட்டிருப்பதை செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன. இருப்பினும் சர்வதேச விமான நிலையம் சேதமடையவில்லை, ஆனால் அது சாம்பலால் மூடப்பட்டிருப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன.


மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக, நியூசிலாந்து இரண்டு கப்பல்களை  அனுப்பியுள்ளது. எரிமலையால் ஏற்பட்ட அழிவினால் பாதிக்கப்பட்டுள்ள டோங்காவுக்கு  மனிதாபிமான உதவிகளை வழங்க, ஆஸ்திரேலியாவின் C-130 விமானம் தயாராக உள்ளது.


ALSO READ | இங்கிலாந்தின் அடுத்த பிரதமர் இந்தியரா? 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR