காணாமல் போன ஆப்கானிஸ்தான் சுப்ரீம் லீடர்; நீடிக்கும் மர்மம்..!!
தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றி, அமெரிக்க படைகள் அங்கிருந்து முழுமையாக விலகி விட்ட போதிலும், அங்கு இன்னும் தாலிபான்களால் ஆட்சியை முறையாக அமைக்க முடியாத நிலை தான் உள்ளது.
தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றி, அமெரிக்க படைகள் அங்கிருந்து முழுமையாக விலகி விட்ட போதிலும், அங்கு இன்னும் தாலிபான்களால் ஆட்சியை முறையாக அமைக்க முடியாத நிலை தான் உள்ளது. மேலும், அவர்கள் மேற்கொண்டு வரும் அடக்குமுறை, வன்முறை மற்றும் அராஜ செயல்களால், மக்கள் அவர்கள் கொடுங்கோல் ஆட்சியில் இருந்து தப்ப நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என துடிக்கின்றனர்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் சில நாட்களுக்கு முன் தலிபான்கள் இறுதியாக அதன் தலைமையை இறுதி செய்து, முல்லா முகமது ஹசன் அகுந்த்ஸாடா (Mullah Haibatullah Akhundzada) என்பவரை ஆப்கானை ஆளப்போகும் புதிய தலைவராக நியமனம் செய்துள்ளதாக அறிவித்தனர். தாலிபான்களின் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட முகம், முல்லா அப்துல் கனி பரதர் துணை பிரதமராக இருப்பார் எனவும் கூறப்பட்டது. இப்போது இந்த இருவரும் காணாமல் போனதாகத் கூறப்படுகிறது. அவரகளது மறைவு குறித்து பல கேள்விகள் எழுந்துள்ளன.
முல்லா ஹைபத்துல்லா அகுந்த்ஸாடா, தாலிபானின் தலைவராக இருந்தவர். அவர பல நாட்களாக காணவில்லை. எனினும், அவரது மரணம் குறித்த வதந்திகளை தாலிபான செய்தித் தொடர்பாளர் மறுத்துள்ளார்.
ALSO READ | அதிர்ச்சித் தகவல்! பெண்ணின் சடலங்களுடனும் உடல் உறவு கொள்ளும் தாலிபான்கள்..!!
ஆப்கானிஸ்தானின் தாலிபான்களுக்குள் நடக்கு அதிகார போட்டி காரணமாக மூத்த தாலிபான் தலைவருடன் ஏற்பட்ட சண்டையில் அவர் மரணம் அடைந்ததாக வதந்திகள் பரவி வருகின்றன. தாலிபான்களுக்குள் சண்டை நடக்கிறதா என்ற சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது
முன்னதாக, சுப்ரீம் தலைவராக இருப்பார் என பெரிதும் பேசப்பட்ட அப்துல் கானி பராதர் (Mullah Abdul Ghani Baradar) இறந்து விட்டது தொடர்பான வதந்திகள் தீயாய் பரவிய போது, அவர் கந்தஹாரில் இருப்பதாகக் கூறி அவர் பேசியதாக கூறப்படும் ஆடியோ செய்தியைப் பகிர்ந்து கொண்டனர். ஆனால், வீடியோ இல்லாமல், ஏன் ஆடியோ செய்தி வெளியிட்பட்டது என மேலும் இது சந்தேகங்களை எழுப்பியது. ஆன்லைனில் பகிரப்பட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படம், எப்போது எடுக்கப்பட்டது என்பது குறித்து. உறுதிப்படுத்தப்படவில்லை.
ALSO READ | பாலியல் அடிமை முதல் தீக்குளிப்பது வரை; ஆப்கான் பெண் நீதிபதி விவரித்த திகில் சம்பவங்கள்
வதந்திகளை மறுத்துள்ள, தாலிபான் செய்தித் தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன் ட்விட்டரில், “ஆப்கானிஸ்தானின் இஸ்லாமிய பேரரசின் துணை பிரதமர் முல்லா பிராதர், ஒரு மோதலில் அவர் காயமடைந்தார் அல்லது கொல்லப்பட்டார் என கூறப்படுவது முற்றிலும் ஆதாரமற்றது” என்று கூறியுள்ளார்.
ALSO READ | ஆப்கானிஸ்தானில் ஜனநாயகத்திற்கு இடமில்லை; ஷரியத் சட்டம் தான்: தாலிபான்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR