COVID-19 சிகிச்சையில் Hydroxychloroquine சிறப்பாக செயல்படுகிறது: Donald Trump
ஹைட்ராக்ஸி குளோரோகுயின் COVID-19 சிகிச்சையில் சிறப்பாக செயல்படுகிறது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம்புகிறார்.
ஹைட்ராக்ஸி குளோரோகுயினை (Hydroxychloroquine) மிகவும் நம்பிக்கைக்குரிய நோய்த்தடுப்பு மருந்தாக தான் பார்ப்பதாக என்று அதிபர் எப்போதும் கூறி வருகிறார் என்றும் ஆனால் மருத்துவரின் அலோசனை இல்லாமல் அதை எடுத்துக்கொள்ளக்கூடாது" என்று வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கெய்லீ மெக்னனி (Kayleigh McEnany )ஒரு செய்தி மாநாட்டில் கூறினார்.
வாஷிங்டன் (WASHINGTON): அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (US President Donald Trump), மலேரியா மருந்தான, ஹைட்ராக்ஸி குளோரோகுயின், கொரோனா வைரஸால் தொற்றுநோயைத் தடுக்க எந்த அளவிற்கு சிறப்பாக செயல்படுகிறது என்பது நிரூபிக்கப்படாவிட்டாலும், அதை ஒரு நம்பிக்கைக்குரிய மருந்தாக தொடர்ந்து Donald Trump நம்புகிறார் என்று வெள்ளை மாளிகை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
ALSO READ | சிங்கப்பூரில் கொரோனா பரவலுக்கு மத்தியிலும் நடக்கும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு
இரண்டு வெள்ளை மாளிகை ஊழியர்களுக்கு COVID-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மே மாதம் முதல் தான் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை சாப்பிடத் தொடங்கியதாக டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறினார். மலேரியா மருந்தை இரண்டு வார காலம் எடுத்துக் கொண்ட பிறகு டிரம்பிற்கு, அதனால், எந்தவிதமான பக்க விளைவுகளும் இல்லை என அவரது மருத்துவர் கூறினார். இதனால் இதய பிரச்சினைகளை ஏற்படலாம் என அவரது மருத்துவர் கடந்த மாதம் கூறியிருந்தார்.
COVID-19 நோயாளி வெளியிட்ட பரபரப்பு வீடியோவினால், ஏற்பட்ட சிக்கல்…!!!
இந்த வார தொடக்கத்தில், மற்றொரு உலகத் தலைவரான பிரேசில் (Brazil) அதிபர் ஜெய்ர் போல்சனாரோ (Jair Bolsonaro), தனக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட பின்னர், ஹைட்ராக்ஸி குளோரோகுயின் எடுத்துக்கொள்வதாக கூறினார். இந்த மருந்து எளிதில் எல்லோருக்கும் கிடைக்க செய்ய நடவடிக்கை எடுக்க போல்சனாரோ தனது அரசை வலியுறுத்தினார். மேலும் COVID-19 தொற்று ஏற்பட்டால் சிகிச்சையளிப்பதற்கும் தொற்று ஏற்படாமல் தடுப்பதற்கும் பயன்படுத்துமாறு பிரேசில் மக்களை ஊக்குவித்தார்.