அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் அதிகாரப்பூர்வமாக தேர்வு
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப், தேர்தல் சபை ஓட்டெடுப்பிலும் வெற்றி பெற்று அமெரிக்க அதிபராக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டார்.
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப், தேர்தல் சபை ஓட்டெடுப்பிலும் வெற்றி பெற்று அமெரிக்க அதிபராக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டார்.
அமெரிக்காவின் 45-வது அதிபராக குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப் தேர்வு செய்யப்பட்டார். அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்டு டிரம்ப்.
அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த நவம்பர் 8-ந்தேதி நடந்தது. அதில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் எதிர்பாராதவிதமாக வெற்றி பெற்றார். ஜனநாயக கட்சியின் ஹிலாரி கிளிண்டன் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
ஜனவரியில் டொனால்டு டிரம்ப் பதவி ஏற்க உள்ளார். அதிபர் தேர்தலில் மக்கள் ஓட்டெடுப்பில் வெற்றி பெறுபவர், மாநிலங்களில் உள்ள தேர்தல் சபை ஓட்டெடுப்பிலும் வெற்றி பெற வேண்டும்.
இந்நிலையில் தேர்தல் சபை உறுப்பினர்களின் கூட்டம் நேற்று நடத்த முடிவு செய்யப்பட்டது. 538 பிரதிநிதிகளை கொண்ட இக்கூட்டத்தில் 270 பேரின் ஓட்டுகளை டிரம்ப் பெற வேண்டும். இக்கூட்டத்தில் 304 எலக்ட்ரோல் ஓட்டுகளை பெற்று டிரம்ப், அமெரிக்க அதிபராக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டார். ஹிலாரிக்கு 227 எலக்ட்ரோல் ஓட்டுகள் கிடைத்தது.
இதையடுத்து அமெரிக்காவின் 45-வது அதிபராக முறைப்படி டொனால்டு டிரம்ப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.