இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த பூகம்பம்; சுனாமி எச்சரிக்கை
இந்தோனேசியாவின் ஜாவா தீவில் ஒரு சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் சுனாமி ஏற்ப்படலாம் என எச்சரித்துள்ளது.
ஜகார்த்தா: இந்தோனேசியாவின் ஜாவா தீவில் ஒரு சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் சுனாமி ஏற்ப்படலாம் என எச்சரித்துள்ளது.
இந்தோனேசியாவின் ஜாவா தீவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்ப்படுவது வழக்கம். ஆனால், இந்த முறை ரிக்டர் அளவு 6.9 ஆக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் தான் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 6.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால், சுனாமி 3 மீட்டர் (10 அடி) உயரத்தை உருவாக்கும் அபாயம் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தலைநகர் ஜகார்த்தா உட்பட பல நகரங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சேதம் அல்லது உயிரிழப்புகள் பற்றிய உடனடி அறிக்கைகள் எதுவும் இல்லை. இந்தோனேசியாவின் பேரிடர் அமைப்பு பான்டென் கடற்கரையில் வசிப்பவர்களை "உடனடியாக உயர்வான பகுதிக்கு செல்லுமாறு" கூறியுள்ளது.
கடந்த செப்டம்பரில் இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் 2,000-க்கும் மேற்பட்டோர் சுனாமியால் பலியானர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. புவியியல் ரீதியாக பசிபிக் பகுதியின் "ரிங் ஆஃப் ஃபயர்" எனக் கூறப்படும் இடத்தில் இந்தோனேசியா உள்ளதால், அடிக்கடி பூகம்பங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகளால் பாதிக்கப்படுகிறது.