நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கியில் உள்ள நிசான்டாசி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 20 வயது மாணவர் போரன் குபாத், வாட்ஸ்அப்பில் வீடியோ ஸ்டேட்டஸ் மூலம் தனது இருப்பிடத்தைப் பகிர்ந்த பின்னர் இடிபாடுகளுக்கு அடியில் இருந்து மீட்கப்பட்டார். குபாத் மற்றும் அவரது குடும்பத்தினர் அவர்களது சொந்த ஊரான மாலத்யாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கினர். "இந்த வாட்ஸ்அப் ஸ்டேடஸை பார்ப்பவர்கள், தயவுசெய்து வந்து உதவுங்கள். தயவுசெய்து அனைவரும் வந்து எங்களை காப்பாற்றுங்கள்" என்று குபாத் வீடியோவில் கூறியதை, வைஸ் வேர்ல்ட் நியூஸின் டிக்டாக் பதிவில் பார்க்கலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தனது தாயின் உடல்நிலை நன்றாக இருப்பதாகவும், அவர்கள் இரண்டாவது மாடியில் உள்ள எஃப்ரூஸ் அடுக்குமாடி குடியிருப்பில் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கி இருப்பதாகவும் குபாத் கூறினார். "என்னால் என் மாமா எங்கிருக்கிறார் என்பது சரியாக தெரியவில்லை," என்று 20 வயதான குபாத் மேலும் கூறினார். அவசர சேவை பிரிவினர் குபத்தை கண்டுபிடித்தனர்., மேலும் அவர் தனது தாயுடன் மீட்கப்பட்டார். இருப்பினும், அவரது மாமா மற்றும் பாட்டி இன்னும் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கியனர்.


பின்னர், அனடோலு ஏஜென்சியிடம் பேசிய குபத், தனது ஓய்வு நேரத்தை தனது குடும்பத்துடன் கழிப்பதற்காக மீண்டும் மாலத்யாவுக்கு வந்ததாகக் கூறினார். இரவு உறங்கச் சென்ற பிறகு முதல் நிலநடுக்கத்தில் அவரது குடும்பத்தினர் சிக்கியதாக குபாத் கூறினார். "நிலநடுக்கத்தின் போது நாங்கள் தூங்கிக் கொண்டிருந்தோம். அப்போது திடீரென குலுங்கியது, நான் கண்களைத் திறந்தவுடன் என் தலையைத் தாழ்த்தி பார்த்தேன். என் அம்மா என் அருகில் விழுந்ததைக் கண்டேன்," என்று கூறிய பல்கலைக்கழக மாணவர் தனது தொலைபேசி தன்னிடம் இருந்ததாக கூறினார், மேலும் அவர் உடனடியாகவும் அதை எடுத்து தனது நண்பர்களை அழைக்க முயற்சி செய்ததாக கூறினார். "என்னுடைய நண்பர்கள் அனைவரும் என வாட்ஸப் ஸ்டேடஸைப் பார்த்தால், அதை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டால், அவர்கள் அனைவரும் தன்னை காப்பாற்ற வரலாம்" என்று தான் நம்பியதாக அவர் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.


மேலும் படிக்க | Earthquake: நிலநடுக்கத்தின் கோரத்தண்டவத்தின் எதிரொலி! 21000த்தை தாண்டிய பலி எண்ணிக்கை


அவர் ஐந்தரை முதல் ஆறு மணி நேரம் வரை இடிபாடுகளுக்கு அடியில் இருந்ததாகவும், அவரது நண்பர்கள் ஸ்லெட்ஜ்ஹாம்மரைப் பயன்படுத்தி இடிபாடிகளின் மீது சரியான இடத்தைத் கண்டுபிடித்து அவரையும் அவரது குடும்பத்தினரையும் கண்டுபிடித்ததாகவும் குபாத் கூறினார். 


துருக்கி மற்றும் சிரியாவில் இதுபோன்ற பல கதைகளில் போரன் குபாட்டின் ஆச்சர்யமான கதையும் ஒன்றாகும், அங்கு இடிபாடுகளுக்கு அடியில் சிக்கிய மக்கள் பலர், உயிருடன் காப்பாற்றப்பட்டனர். சில நாட்களுக்கு முன்பு, ஏழு வயது சிரியா சிறுமி ஒருவர் இடிந்து விழுந்த வீட்டின் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கிக் கொண்ட நிலையில், தனது சிறிய சகோதரனைப் பாதுகாத்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 17 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அவர்கள் மீட்கப்பட்டனர்.


அதே போன்று சிரியாவில் இடிந்து விழுந்த கட்டிடத்தின் எச்சங்களுக்கு அடியில் ஒரு குழந்தை பிறந்தது. தாய் இடிபாடுகளுக்கு அடியில் பிரசவித்தார். ஆனால் சிறிது நேரத்தில் இறந்துவிட்டார். சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோ ஒன்று, புதிதாகப் பிறந்த குழந்தையைக் கைகளில் தூக்கிக் கொண்டு மீட்பு பணியில் இருந்த வீரர் ஓடுவதைக் காட்டுகிறது. அரபு மொழியில் அதிசயம் என்று பொருள்படும் அயா என்று அந்த பெண் குழந்தைக்கு பெயரிடப்பட்டது. அயாவின் தந்தை மற்றும் நான்கு உடன்பிறப்புகளும் நிலநடுக்கத்தால் இறந்தனர், ஆயிரக்கணக்கான மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் அவளை தத்தெடுக்க விருப்பம் தெரிவித்தனர். ஐயா தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


துருக்கி - சிரியா நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 22,000ஐ நெருங்கியுள்ளது. துருக்கியில் 18,342 பேரும், சிரியாவில் 3,377 பேரும் உயிரிழந்த நிலையில், திங்களன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21,719 ஆக உயர்ந்துள்ளது. இரு நாடுகளிலும் உள்ள மீட்புப் பணியாளர்கள் உயிர் பிழைத்தவர்களைக் கண்டுபிடிப்பதற்காக அல்லும் பகலும் பணி செய்து வருகின்றனர். பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என நிபுணர்கள் ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளனர். இதற்கிடையில், வியாழன் (பிப்ரவரி 9) அமெரிக்கா, துருக்கி மற்றும் சிரியாவிற்கு 85 மில்லியன் டாலர் அவசர மனிதாபிமான உதவியை வழங்குவதாகக் கூறியது. 


மேலும் படிக்க |  நெஞ்சை உலுக்கும் வீடியோ: துருக்கி நிலநடுக்கம் - 22 மணிநேர போராட்டம்... பெண் உயிருடன் மீட்பு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ