Turkey Earthquake Viral Video: துருக்கி மற்றும் அதன் நாடுகளை நேற்று (பிப். 7) ஒரே நாளில் நிலநடுக்கம் தலைகீழாக புரட்டிப்போட்டுள்ளது. குறிப்பாக, மத்திய துருக்கி பகுதிகளும், சிரியா எல்லைப் பகுதிகளிலும் நேற்று காலையில் 7.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பல்வேறு கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, குறிப்பிட்ட இடைவெளியில் அடுத்தடுத்து நிலநடுக்கம் என மொத்தம் ஐந்து முறை ஏற்பட்டுள்ளது.
துருக்கி, சிரியாவை ஆகியவை சேர்ந்த, தொடர்ச்சியான நிலநடுக்கத்தால் கட்டட இடிபாடுகளில் சிக்கி இதுவரை 5 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பச்சிளங்குழந்தை முதல் வயது மூத்தோர் வரை கடும் சேதாரம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, கட்டட இடிபாடுகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நிலநடுக்கம் தொடர்வதால் மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து, பல்வேறு நாடுகள் மீட்பு பணிக்கும், நிவாரணத்திற்கும் உதவிக்கரம் நீட்டி வருகின்றன. இந்தியாவும் பல்வேறு நிவாரண பொருள்களுடன் விமானத்தில் துருக்கிக்கு சென்றடைந்துள்ளது. மீட்புப்பணிகளின் காட்சிகளையும், நிலநடுக்கத்தின் கோர முகத்தையும் சமூக வலைதளங்களில் வெளியாகும் வீடியோக்களில் காண முடிகிறது.
மேலும் படிக்க | துருக்கி சிரியா நிலநடுக்க பலி எண்ணிக்கை அதிகரிப்பு! உதவிக்கு விரைந்த இந்தியா
அந்த வகையில், நீண்ட போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்ட பெண்ணின் தற்போது வெளியாகியுள்ளது. அந்த காட்சிகள் பார்ப்போர் மனதை வாட்டுகிறது. வைரலாகி வரும் அந்த வீடியோ, மத்திய - கிழக்கு மாகாணமான சான்லியுர்ஃபாவில், கட்டட இடிபாடுகளில் சிக்கியிருக்கும் பெண்ணை, அந்நாட்டின் மீட்புப் படையினர் அந்த பகுதி மக்கள் உதவியுடன் 22 மணிநேரம் போராடி உயிருடன் மீட்டுள்ளனர்.
A woman is rescued from the rubble of a collapsed building in southeastern province of Sanliurfa after 22 hours https://t.co/9XuWtuDWGi pic.twitter.com/A7kpzGEkhd
— ANADOLU AGENCY (@anadoluagency) February 7, 2023
இந்த அதிர்ச்சியூட்டும் வீடியோக்கள், மழை மற்றும் பனியுடன் மக்கள் போராடுவதையும், வீட்டு குப்பைகள் நிறைந்த மலைகளுக்குள் இருந்து உதவிக்காக அழுவதைக் காட்டுகின்றன. தற்போது அங்கு குளிர்காலம், பனி நிறைந்த அதிகாலை இருட்டில் ஏற்பட்ட நிலநடுக்கம் சைப்ரஸ், லெபனான் நாட்டிலும் உணரப்பட்டது. ஏறக்குறைய கடந்த நூற்றாண்டில் ஏற்பட்ட மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் அங்கு இதுதான். அதைத் தொடர்ந்து பல நில அதிர்வுகளும் ஏற்பட்டன. சமூக ஊடக வீடியோக்கள் பல இடிந்து விழுந்த கட்டிடங்கள் மற்றும் பீதியடைந்த உள்ளூர் மக்கள் தெருக்களில் பதுங்கி இருப்பதைக் காட்டியது.
இதற்கிடையில், துருக்கியின் தெற்கு பிராந்தியத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிர்களை பலிகொண்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அந்நாட்டு அதிபர் நாட்டில் 7 நாள் தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவித்தார். சிரியாவில் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் 1500 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | ஒருவழியாக பலூனை சுட்டுவீழ்த்தியது அமெரிக்கா... அடுத்தது என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ