ஜப்பானை சேர்ந்த ஒருவர் தனது சமூக வலைதளத்த பக்கத்தில், கொசு ஒன்றினை கொன்று அந்த புகைப்படத்தை வெளியிட்டதால் அவரின் ட்விட்டர் கணக்கு தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஹிந்துஸ்தான் டைம்ஸ் கூற்றின்படி ஆகஸ்ட் 20ஆம் தேதி @nemuismywife எனும் ட்விட்டர் கணக்கின் மூலம் அந்த புகைப்படம் போடப்பட்டுள்ளது. மேலும் அந்த நபர் பதிவிட்டுலதவது "நான் தொலைக்காட்சியை அமைதியாக பார்க்கும் பொது, நீங்கள் என்னைக் கடிக்கிறீர்கள்? டை!" என்று ட்வீட் செய்துள்ளார்.


அதன் பின்னர் அவரது ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டதாக அவருக்கு ஒரு செய்தி அனுப்பியுள்ளது ட்விட்டர்.


எனவே அவர் மீண்டும் ஒரு புதிய கணக்கினை @DaydreamMatcha என்ற பெயரில் உருவாக்கியுள்ளார். பின்னர் இந்த கணக்கின் மூலம் "ஒரு கொசுவை நான் கொன்றதாகக் கூறி ட்விட்டரில் பதிவிட்டப்பின் எனது முந்தைய கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டுவிட்டது. கொசுவை கொன்றது மீறலாகுமா?" என பதிவிட்டுள்ளார்.


இணையத்தில் இந்த ட்வீட் ஆனது 31,000 தடவை ரீ-ட்வீட் செய்யப்பட்டுள்ளது மற்றும் 27,000 க்கும் மேற்பட்ட ட்விட்டர் பயனர்களால் விரும்பப்பட்டுள்ளது.