கடந்த ஆண்டு ஜூலை மாதம் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் ராஜினாமா செய்ததை அடுத்து, புதிய பிரதமராக தெரசா மேவை நியமித்தார் ராணி எலிசபெத்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், இங்கிலாந்து மந்திரிசபை மாற்றி அமைக்கப்பட்டது. இந்த மந்திரிசபையில் இந்தியாவை சேர்ந்த 2 எம்.பி.களுக்கு பதவிகள் வழங்கியுள்ளார் பிரதமர் தெரசா மே. இந்தியாவை சேர்ந்த ரிஷி சுனக் மற்றும் சுயல்லா பெர்னாண்டஸ் இருவருக்கும் துணை மந்திரி பதவி வழங்கியுள்ளார்.


இதில் ரிஷி சுனக்(37) இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மருமகன் ஆவார். சுயல்லா பெர்னாண்ஸ்(37) கோவாவை பூர்வீகமாக கொண்ட இவர். இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்தவர்.