இந்தோனேசியா: இந்தோனேசியாவில் மது அருந்தி சூதாட்டம் ஆடிய இரண்டு கிறிஸ்தவ ஆண்கள் பலருக்கு மத்தியில் காட்டுமிராண்டித் தனமாக அடிக்கப்பட்டார்கள். முஸ்லிம் அல்லாதவர்கள் இப்படிப்பட்ட ஒரு தண்டனையைப் பெறுவது அங்கு ஒரு அரிய நிகழ்வாகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாட்டின் தீவிர பழமைவாத ஆச்சே மாகாணத்தில் வலதுசாரி குழுக்களால் இது வெகுவாக விமர்சிக்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.


இஸ்லாமிய சட்டத்தை விதிக்கும் உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட முஸ்லிம் பெரும்பான்மையுடைய ஒரே மாகாணம் ஆச்சே மாகாணம் என்பது குறிப்பிடத்தக்கது.


திங்களன்று அந்த மாகாணத்தில் பகிரங்கமாக அடிக்கப்பட்ட ஏழு பேரில் இரு கிறிஸ்தவர்களும் அடங்குவர்.


ஓரின சேர்க்கையில் ஈடுபட்டதற்காக ஒரு ஆண் தம்பதியினர் தலா 80 முறை தடிகளால் அடிக்கப்பட்ட சம்பவம் நடந்து இரு வாரங்கள் கூட ஆகாத நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஓரினச் சேர்க்கை உள்ளூர் இஸ்லாமிய சட்டத்தின் கீழ் சட்டவிரோதமானது.


திங்களன்று, குற்றம் சாட்டப்பட்ட இருவருமே முகமூடி அணிந்த ஷரியா (Sharia) அதிகாரியால் தலா 40 முறை கம்புகளால் அடிக்கப்பட்டனர்.


அடி வாங்கிய இருவரில், ஜே.எஃப் என மட்டுமே அடையாளம் காணப்பட்ட ஒருவர், குற்றவியல் வழக்கைத் தவிர்ப்பதற்காக அடி வாங்கிக்கொள்ளும் தண்டனையை தான் ஏற்றுக்கொண்டதாகக் கூறினார். குற்றவியல் வழக்கில் சிக்கினால் அவர் ஆறு மாதங்களுக்கு சிறையில் அடைந்திருக்க வேண்டி இருக்கும்.


ALSO READ: மியான்மரில் பேஸ்புக்கை தொடர்ந்து ட்விட்டர், இன்ஸ்டாகிராமையும் முடக்கியது ராணுவம்


தேசிய மற்றும் மதச் சட்டங்களை மீறும் குற்றம் புரிந்த முஸ்லிமல்லாதவர்கள், எந்தவொரு அமைப்பின்கீழ் தங்கள் மீது வழக்குத் தொடரப்பட வேண்டும் என்பதை தேர்வு செய்யலாம்.


இருப்பினும், முஸ்லிமல்லாதவர்களை அடித்து தண்டனை அளிப்பது என்பது இந்தொனேஷியாவில் ஒரு அரிதான விஷயம்தான். இருப்பினும், சூதாட்டம் (Gambling) மற்றும் மது விற்பனை உள்ளிட்ட குற்றங்களுக்கு சமீபத்திய ஆண்டுகளில் ஒரு சிலருக்கு மட்டுமே தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.


மற்ற ஐந்து பேரும் முஸ்லிம்கள். அவர்கள், தகாத உறவு மற்றும் மது அருந்தியதற்காக தண்டிக்கப்பட்டார்கள். இவை இரண்டுமே முஸ்லீம் மத சட்டங்களை மீறும் செயல்களாகும்.


இதற்கிடையில், பொது இடத்தில் இந்த வகையில் அடித்து தண்டனை அளிப்பதை மனித உரிமைகள் குழுக்கள் வெகுவாக கண்டித்துள்ளன. இந்தோனேசியாவின் (Indonesia) அதிபர் கோகோ விடோடோவும் இப்படிப்பட்ட தண்டனைகளை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என கூறியுள்ளார்.


ALSO READ: மியான்மாரில் தொடரும் பதற்றம்.. வெளிநாட்டவரையும் விட்டு வைக்காத ராணுவம்..!!!