இங்கிலாந்தில் தாக்குதல்: 22 பேர் உயிரிழப்பு - மோடி கடும் கண்டனம்
இங்கிலாந்தின் பொலிஸ் மான்செஸ்டர் வெடிப்பில் கொல்லப்பட்ட ஒரே தாக்குதல், இறப்பு எண்ணிக்கை 22 ஆக உயர்ந்தது
மான்செஸ்டர் இங்கிலீஸ் சிட்டி மைதானத்தில் அமெரிக்க இசை கலைஞர் அரினா கிராண்டேவின் இசை நிகழ்ச்சியின் போது நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 22 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 50-க்கு அதிகமானோர் காயம் அடைத்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அந்த பகுதியை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தற்கொலை பயங்கரவாதிதான் நடத்தி இருக்க கூடும் என அமெரிக்க அதிகாரிகள் கூறி உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. ஆனால் தாக்குதல் நடத்தப்பட்டதற்கான உறுதியான காரணம் இன்னும் தெரியவரவில்லை.
இந்த தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக தான் மனம் வருந்துவதாக பிரிட்டன் பிரதமர் தெரசா மே தெரிவித்தார்.
இதைக்குறித்து அவர் கூறியதாவது:-
இசை நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட தாக்குதலை போலீஸ் தீவிரவாத தாக்குதலாகவே கருதுகின்றனர். இத்தாக்குதல் குறித்து போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர். தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்" என தெரசா மே கூறி உள்ளார்.
இந்த தாக்குதலை இந்தியா வன்மையாக கண்டிக்கிறது என இந்திய பிரதமர் மோடி தனது டுவிட்டர் கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது:-
தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் எனப் பிரார்த்தனை செய்கிறேன் என தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி கூறி உள்ளார்.