UK Election: பரபரப்பான இறுதி கட்ட தேர்தல்; பிரிட்டனின் அடுத்த பிரதமர் யார்..!!
UK PM Election: இன்று மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவு ஆக உள்ள நிலையில், பிரிட்டனின் புதிய பிரதமர் யார் என்பதற்கான விடை இன்று தெரிந்து விடும்.
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலகியதை அடுத்து, இங்கிலாந்தில் புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த ஜூலை 7-ம் தேதி, பிரிட்டன் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்தார். கொரோனா காலத்தில் பிறந்தநாள் கொண்டாடியது, பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய நபருக்கு அரசு அதிகாரியாக நியமித்தது, பணவீக்கத்தை கட்டுப்படுத்த தவறியது போன்ற சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளால் கட்சிக்கு உள்ளேயே போரிஸ் ஜான்சனுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. அதையடுத்து ரிஷி சுனக் உள்ளிட்ட கன்சர்வேடிவ் கட்சியின் அமைச்சர்களே ராஜினாமா செய்ததை அடுத்து, நெருக்கடிக்குள்ளான போரிஸ் ஜான்சன், தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதை அடுத்த, பிரிட்டனுக்கு புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. அந்த தேர்தலில் இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் உள்ளிட்ட 8 பேர் போட்டியிட்டனர். பல கட்டங்களாக நடைபெற்ற பிரதமர் தேர்தலில், எம்.பி-க்கள் வாக்கு செலுத்தினர். இதில் ரிஷி சுனக் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார். பிரிட்டன் பிரதமர் பதவிக்கான தேர்வு இறுதி கட்டத்தை எட்டிவிட்ட நிலையில் இறுதியாக களத்தில் இருக்கும் ரிஷி சுனக் மற்றும் லிஸ் டிரஸ் ஆகியோர் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். ரிஷி சுனக்கிற்ற்கு இங்கிலாந்து புதிய பிரதமர் ஆகும் வாய்ப்பு அதிக இருப்பதாக கூறப்பட்டது.
மேலும் படிக்க | பிரிட்டன் பிரதமர் தேர்தலில் இந்திய வம்சாவளி வேட்பாளர் - யார் இந்த ரிஷி சுனக்?
பிரதமர் பதவிக்கான போட்டியில் ஆரம்பத்தில் இருந்தே இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் முன்னிலை வகித்து வந்த நிலையில், திடீர் திருப்பமாக லிஸ் டிரஸ் முந்துவதாக தகவல்கள் கூறுகின்றன. திடீர் திருப்பமாக 46 வயதான லிஸ் டிரஸ் இந்த பிரதமர் தேர்தலில் முன்னிலை வகித்த்து வருவதாக கூறப்படுகிறது. போரிஸ் ஜான்சன் பதவி இழக்க ரிஷி சுனக் முக்கிய காரணம் என்பதால், கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்கள் மத்தியில் ரிஷி சுனக்கை தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பதாகவும், ரிஷி சுனக்கை விட லிஸ் டிரஸ்சிற்கே அதிக ஆதரவு நிலவியதாகவும் கருத்துக்கணிப்புகளும் கூறி வந்தன. குறிப்பாக வரிக்குறைப்பு செய்யப்படும் என பிரதமர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட லிஸ் டிரஸ் உறுதியளித்துள்ள நிலையில், இதனால் அவருக்கு ஆதரவு அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
எனினும், களத்தில் இரு வேட்பாளர்கள் மட்டுமே இருப்பதால் இதில் ஒருவர் தான் இங்கிலாந்தின் அடுத்த பிரதமர் என்பது உறுதியாகிவிட்டது. இன்று மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவு ஆக உள்ள நிலையில், பிரிட்டனின் புதிய பிரதமர் யார் என்பதற்கான விடை இன்று தெரிந்து விடும். இங்கிலாந்தி,வரும் 2025 ஆம் ஆண்டு அடுத்த பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | UK PM Election : ரிஷி சுனக் - லிஸ் டிரஸ் இடையே அனல் பறந்த விவாதம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ