இங்கிலாந்து பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் சமீபத்தில் ராஜினாமா செய்ததை அடுத்து,  புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க ஆளும் கன்சர்வேடிவ் கட்சி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.  புதிய பிரதமர் பதவிக்கு வர 8 எம்.பி.க்கள் விருப்பம் தெரிவித்தனர். இதையடுத்து, புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்க ஒவ்வொரு சுற்றுகளாக எம்.பி.க்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு சுற்றிலும் குறைந்த வாக்குகளைப் பெறுபவர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதிய பிரதமர் பதவிக்கான தேர்தலில், இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் லிஸ் டிரஸ் ஆரம்பம் முதலே அதிக வாக்குகளுடன் முன்னிலையில் இருந்து வருகின்றனர். இவர்கள் இருவரும்  இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளதை அடுத்து,  இங்கிலாந்தின் புதிய பிரதமருக்கான போட்டியில் ரிஷி சுனக் - லிஸ் டிரஸ் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்கள் இருவரும் தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்று ஆதரவு கோரினர்.


விவாதத்தைப் பார்த்த வழக்கமான வாக்காளர்களின் வாக்கெடுப்பில் சுனக்கின் ஆதரவு 62 சதவிகித்ததில் இருந்து 38 சதவீதமாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.  இங்கிலாந்தின் மேற்கு மிட்லாண்ட்ஸில் உள்ள நகரமான ஸ்டோக்-ஆன்-ட்ரெண்டில் நடைபெற்ற விவாதத்தின் போது, ​​சுனக் தனது போட்டியாளரான லிஸ் டிரஸ்ஸை மிகவும் கடுமையாக விமர்சித்தார்.


விவாதத்தில், சீனா மீதான இங்கிலாந்து கொள்கை மிகவும் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்பதை  இருவரும் ஒப்புக்கொண்டனர். எனினும் டிரஸ் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டதையும் சீனாவுடனான பிரிட்டனின் உறவுகளின் பொற்காலம் என்று டிரஸ் முன்னர் விவரித்ததாகவும், அதற்கு ஆதரவாக வாதிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார். சீனாவின் சைபர் தாக்குதல் அச்சுறுத்தல்களை சமாளிக்கவும் தொழில்நுட்ப பாதுகாப்பில் சிறந்த நடைமுறையைப் பகிர்ந்து கொள்ளவும், புதிய சர்வதேச கூட்டணியை நான் உருவாக்குவேன் என ரிஷி சுனக் உறுதி அளித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | பிரிட்டன் பிரதமர் பதவி - இறுதிச்சுற்றில் ரிஷி சுனக் - லிஸ் டிரஸ்


விவாதத்தில் உக்ரைன் துறைமுகங்களில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் தானியங்களை பாதுகாக்க இங்கிலாந்து கடற்படை அனுப்பப்படுமா என்று கேட்கப்பட்டதற்கு அனுப்பப்படாது என்று இருவரும்  ஒருமித்த கருத்தை தெரிவித்தனர். உக்ரைனுக்கு ஆதரவாக பொருளாதார உதவி போன்றவற்றை இங்கிலாந்து தொடர்ந்து செய்யும் என்று ரிஷி சுனக் கூறினார். அதேபோல இங்கிலாந்து அந்த போரில் நேரடியாக தலையிடாது என்று லிஸ் டிரஸ் தெரிவித்தார்.


புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில், ஆதரவு வாக்குகள் எண்ணப்பட்டு அதிக வாக்குகளை பெற்ற வேட்பாளர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். செப்டம்பர் 5-ம் தேதி வெற்றி வேட்பாளர் இங்கிலாந்தின் புதிய பிரதமராக அறிவிக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | UK politics: பிரதமர் ரேஸில் முந்தி செல்லும் ரிஷி சுனக்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ