SeePics: இணையத்தை கலக்கும் இளவரசர் லூயிஸ்!
பிரட்டன் ராயல் குடும்பம் இன்று தங்களது குடும்பத்தின் புதுவரவான இளவரசர் லூயிஸ் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளனர்!
லண்டன்: பிரட்டன் ராயல் குடும்பம் இன்று தங்களது குடும்பத்தின் புதுவரவான இளவரசர் லூயிஸ் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளனர்!
இன்று வெளியிட்டுள்ள இரண்டு புகைப்படங்களில் ஒன்றில், இளவரசர் லூயிஸினை அவரது சகோதரி இளவரசி சாரோலெட் முத்தம் கொடுக்கும் காட்சி இடம்பெறும் வகையிலும். மற்றொன்றில் லூயிஸ் தூங்கும் காட்சி இடம்பெறும் வகையிலும் அமைந்துள்ளது.
இந்த புகைப்படத்தினை கெனிஸ்டங் பேலஸ் வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படங்களில் இளவரசர் ஜார்ஜ் மற்றும் கேடி வில்லியம்ஸ் இடம்பெறவில்லை.
இந்த புகைப்படம் இளவரசரின் 3-வது பிறந்தநாளான மே 2 அன்று எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
இளவரசர் லூயிஸ் ஆர்த்தர் சார்லஸ், பிரிட்டன் அரச குடும்பத்தின் 5-ஆம் தலைமுறை வாரிசாகும். ராணி எலிசபத்தின் 6-வது தலைமுறை பேரன் ஆவார்.