ஈரானில் இருந்து உக்ரைன் புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளானதில் பயணம் செய்த அனைவரும் பலியாகியுள்ளதாக தகவல் வெளியானது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க ராணுவம் நடத்திய வான்தாக்குதலில் ஈரான் நாட்டு ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொலை செய்யப்பட்டார். அவர் ஈரானின் சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவராக அறியப்பட்டவர். காசிம் சுலைமானி கொல்லப்பட்ட பிறகு ஈரான் அமெரிக்கா இடையே போர் உருவாகும் சூழல் நிலவி வருகிறது.


இந்த நிலையில், ஈராக்கின் அல் அசாத் பகுதியில் இருந்த அமெரிக்க படைதளத்தின் மீது ஈரான் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. தாக்குதல் நடத்தப்பட்டதை அமெரிக்காவும் உறுதி செய்துள்ளது. 


அந்தவகையில் தற்போது உக்ரைன் பயணிகள் விமானத்தை ஈரான் படைகள் தவறுதலாக சுட்டு வீழ்த்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இதனிடையே உக்ரைன் நாட்டு விமானம் ஈரான் தலைநகர் தெஹ்ரான் விமானநிலையத்தில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் விழுந்து நொறுங்கியது. அந்த விமானம் ஈரான் நாட்டு படைகளே தவறுதலாக சுட்டுவீழ்த்தியிருக்கலாம் என அந்நாட்டு ஊடகம் ஒன்று கூறி உள்ளது. இது தொடர்பாக உறுதியான தகவல்கள் கிடைக்கவில்லை.


விமானத்தில் இருந்த அனைவரும் உயிரிழந்ததாக ஈரான் அரசு ஊடகம் தெரிவித்து உள்ளது. விழுந்தவுடன் விமானத்தில் தீ மளமளவென பயங்கரமாக எரிந்ததுள்ளது. 


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது