அரச குடும்பத்திலிருந்து ஹாரி வெளியேற ராணி எலிசபெத் ஒப்புதல்
இங்கிலாந்து அரச குடும்பத்தில் இருந்து இளவரசர் ஹாரி தனது மனைவியுடன் பிரிந்து செல்வதற்கு ராணி எலிசபெத் ஒப்புதல் அளித்துள்ளார்.
இங்கிலாந்து அரச குடும்பத்தில் இருந்து இளவரசர் ஹாரி தனது மனைவியுடன் பிரிந்து செல்வதற்கு ராணி எலிசபெத் ஒப்புதல் அளித்துள்ளார்.
கடந்த 2018ஆம் ஆண்டு இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், டயானா தம்பதியின் இரண்டாவது மகன் இளவரசர் ஹாரிக்கும், நடிகையுமான மேகன் மெர்கலுக்கும் திருமணம் நடந்தது. இந்நிலையில் இங்கிலாந்து இளவரசர் ஹாரி, தனது மனைவியுடன் அரச குடும்பத்தை விட்டு வெளியேறப்போவதாக அண்மையில் செய்திகள் வெளியானது.
இதனைத் தொடர்ந்து அரச குடும்பத்தில் இருந்து ஹாரியும், அவரது மனைவியும் பிரிந்து செல்வது தொடர்பாக விவாதிக்க குடும்ப உறுப்பினர்களுக்கு ராணி எலிசபெத் அழைப்பு விடுத்தார். இதையடுத்து சாண்ட்ரிங்ஹாம் எஸ்டேட் பகுதியில் உள்ள அரண்மனையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இந்தக் கூட்டத்திற்குப் பின் இங்கிலாந்து ராணியின் பெயரில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில், புதிய வாழ்க்கையைத் தொடங்க இருக்கும் ஹாரிக்கும், மேகனுக்கும் தங்கள் ஆதரவைத் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அரச குடும்ப உறுப்பினர்களாக அவர்கள் இருக்க விரும்பிய போதிலும், சுதந்திரமான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற அவர்களின் விருப்பத்தை மதிப்பதாகவும், புரிந்துகொள்வதாகவும் ராணி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.