மகளின் கையால் தாயின் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட கொடூரம்!
ஈரானின் காட்டுமிராண்டித்தனமான சட்டத்தின் கீழ் ஒரு பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதில் அதிர்ச்சி தரும் விஷயம் என்னவென்றால், மரணதண்டனையை மகளே தன் கையினால் நிறைவேற்றி வைத்தாள்.
ஈரானில் நடைபெற்ற ஒரு சம்பவம் உங்களை அதிர்ச்சியின் உறைய வைக்கும். அங்கே ஒரு மகள் தவறாக வழிநடத்தப்பட்டதன் காரணமாக, தன் தாயை தூக்கிலிட்டாள். அப்படிச் செய்வதற்கு, ஈரானின் சட்ட விதிகளின் உதவி நாடப்பட்டது, மேலும் அதிர்ச்சி அளிக்கும் சம்பவம். ஈரானில் ஒரு காட்டுமிராண்டித்தனமான சட்டம் உள்ளது. அதில் இறந்தவரின் உறவினருக்கு, குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க உரிமை உண்டு. இந்தச் சட்டத்தின் விதிகளை பயன்படுத்தி, மகளின் கையால் தாய்க்கு மரண தண்டனை வழங்க முதல் ஆணை பிறப்பிக்கப்பட்டு. பின்னர் மகளின் கையினாலேயே தாய் தூக்கிலிடப்பட்டார்.
மகளின் கைகளால் தண்டிக்கப்பட்ட தாய்
ஈரானின் காட்டுமிராண்டித்தனமான சட்டத்தின் கீழ் ஒரு பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதில் அதிர்ச்சி தரும் விஷயம் என்னவென்றால், அந்தப் பெண் தூக்கிலிடப்பட்டபோது, அந்த மரணதண்டனையை மகளே தன் கையினால் நிறைவேற்றி வைத்தாள். தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்காக, அவரது மகள் தண்டனை கொடுக்கும் இடத்திற்கு அழைத்து வரப்பட்டார். தாயின் காலடியில் போடப்பட்டிருந்த நாற்காலியை மகள் எட்டி உதைத்து, மரண தண்டனையை, நிறைவேற்றினாள்
பெண் தூக்கிலிடப்பட்ட காரணம்
மரண தண்டனை பெற்ற பெண்ணின் பெயர் மரியம் கரிமி என்று சொல்லலாம். கணவரைக் கொன்ற வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பெண்ணின் தந்தை இப்ராகிம், தனது மருமகனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைத் தீர்க்க பலமுறை முயன்றும் நடக்கவில்லை என்று கூறப்படுகிறது. மரியத்த்தை அவரது கணவர் அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து இப்ராகிம் தனது மருமகனை கொன்றதாக வும்கூறப்படுகிறது. இந்த வழக்கில் தந்தையுடன், மரியமும் குற்றம் சாட்டப்பட்டார்.
மேலும் படிக்க | அமேசான் காடுகளில் வாழ்ந்த பழங்குடியினத்தின் கடைசி நபர் மரணம்!
மகளிடம் சொன்ன பொய்
பின்னர் சம்பவத்திற்குப் பிறகு, போலீசார் மரியம் மற்றும் அவரது தந்தை இப்ராகிமை கைது செய்தனர். மரியத்தின் 6 வயது சிறுமியை அவரது தாத்தா பாட்டி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுமிக்கு அவரது தாத்தா பாட்டி, அவரது பெற்றோர் உயிருடன் இல்லை என்றும், அவள் ஒரு அனாதை என்று கூறப்பட்டது.
சமீபத்தில், சிறுமிக்கு 19 வயதான நிலையில், அவரது தாய்வழி தாத்தாவும், தாயும் சேர்ந்து, தந்தையைக் கொன்றதாகக் கூறப்பட்டது. இறந்தவரின் நெருங்கிய உறவினர்களாக சிறுமி இருந்த நிலையில், மகளின் கயினாலேயே மரண தண்டனையை நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது.
ஈரானின் காட்டுமிராண்டித்தனமான சட்டம்
ஈரானில், பழிக்கு பழி வாங்கும் சட்டம் உள்ளது குறிப்பிடத்தக்கது. அதன் பெயர் கிசாஸ் சட்டம். இங்கு இறந்தவரின் உறவினர்கள் கையினாலேயே, குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனை குறித்து குறிப்பிட்டுள்ளது. இதில் குற்றவாளிகளுக்கு உறவினர்கள் மரண தண்டனை வழங்கலாம். இது தவிர, அவர்கள் மரணத்திற்கு ஈடாக பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.
மேலும் படிக்க | ஆஸ்திரேலியாவை ஆட்டி படைக்கும் முயல்; ஆண்டுக்கு ரூ.1600 கோடி இழப்பு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ