இலங்கை மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இணையமைச்சர் எல்.முருகன்
Union Minister L Murugan Sri lanka Visit: இலங்கையில் மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு இந்திய இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் பா ஜ.கவின் மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் விஜயம்.
யாழ்ப்பாணம்: இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு நேற்று புதன்கிழமை (பிப்ரவரி 9) வருகை தந்த இந்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் இ.பா ஜ.கட்சியின் தலைவர் கு.அண்ணாமலை ஆகியோர் இன்றைய தினம் வியாழக்கிழமை (பிப்ரவரி 10) காலை மன்னார் மாவட்டத்திற்கு விஜயத்தை மேற்கொண்டனர்.
இன்று காலை 11 மணியளவில், இந்திய அமைச்சர் எல்.முருகன் மற்றும் பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு விஜயம் செய்தனர். அப்போது, இந்தியாவில் இருந்து வந்தவர்களுடன் யாழ்ப்பாண - இந்திய உதவித் துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெய பாஸ்கரனும் உடன் இருந்தார்.
இந்திய பிரதிநிதிகளின் வருகையை முன்னிட்டு செய்யப்பட்ட விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன. இந்திய அரசின் நிதி உதவியுடன் முன் னெடுக்கப்பட்ட ஆலய கட்டுமானப் பணிகளை இந்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் இ.பா ஜ.கட்சியின் தலைவர் கு.அண்ணாமலை ஆகியோர் பார்வையிட்டனர்.
ஆலய பணிகளை பார்வையிட்டதோடு, ஆலய நிர்வாகத்தினருடன் இருவரும் கலந்துரையாடினார்கள். அதனைத்தொடர்ந்து மன்னாரில் இடம் பெற்ற இலங்கை - இந்தியா நட்புறவு நாடுகளின் தூதரகm ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர்.
மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொதிகளை வழங்கும் நிகழ்வில் இந்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் இ.பா ஜ.கட்சியின் தலைவர் கு.அண்ணாமலை ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் படிக்க | IND vs AUS: ரவீந்திர ஜடேஜா பந்தை சேதப்படுத்தினாரா? உண்மை வெளியானது!
முன்னதாக, நேற்று இலங்கை சென்ற இந்திய மீன்பிடி இணை அமைச்சர் எல். முருகன் உள்ளிட்ட குழுவினரை யாழ் விமான நிலையத்தில் வரவேற்ற இலங்கை கடற்றொழில் அமைச்சர் மாலையில் இந்திய மீனவர்களின் படகை இலங்கை மீனவர்களிற்கு வழங்கி வைத்தார்.
மயிலிட்டி துறைமுகப் பகுதியில் இடம்பெற்ற இவ் நிகழ்வில் இந்திய மீனவர்களின் 4 படகுகளை இலங்கை மினவர்களிற்கு வழங்கும் நடவடிக்கை இடம்பெற்றது.
இந்திய மீன்பிடி இணை அமைச்சர் விஜயம் செய்துள்ள நிலையில் இலங்கை கடற்பரப்பி்ல் அத்துமீறி பிரவேசித்த குற்றசாட்டில் அரசுடமையாக்கப்பட்ட இந்திய மீனவர்களின் 4 படகுகளே இவ்வாறு கடற்தொழில் அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தாவினால் இன்று வடக்கு மீனவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | 10 நாடுகளில் உள்ள வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு UPI சேவை!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ