பிபிசி உரிமக் கட்டணம் இரண்டு ஆண்டுகளுக்கு £159ஆக இருக்கும் என்பதை பிரிட்டன் அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரிட்டனின் கலாச்சார செயலர் நாடின் டோரிஸ் நாடாளுமன்றத்தில் லைசன்ஸ் தொடர்பாக பேசினார். அப்போது, £159 ($217, 190 யூரோக்கள்) ஆண்டுக் கட்டணத்தை, நாட்டில் உள்ள ஒவ்வொரு தொலைக்காட்சிப் பெட்டி உரிமையாளரும் செலுத்தவேண்டும் என்று தெரிவித்தார். 


"கடின உழைப்பாளி குடும்பங்களின் பணப்பையில் கூடுதல் அழுத்தத்தை அரசாங்கம் நியாயப்படுத்த முடியாது" என்றார்.


இரண்டு வருட லைசன்ஸ் கட்டணம் (Licence Fee) முடிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு பணவீக்கத்திற்கு ஏற்ப கட்டணம் உயரும்.


பிபிசி தலைவர் ரிச்சர்ட் ஷார்ப் மற்றும் பிபிசி டைரக்டர் ஜெனரல் டிம் டேவி ஆகியோரிடமிருந்து உரிமக் கட்டணத் தீர்வு குறித்த அறிக்கை சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது.



இது "உரிம கட்டணம் செலுத்துபவர்களை பாதிக்கும் கடினமான விஷயம்" என்று பிபிசியின் டைரக்டர் ஜெனரல் டிம் டேவி (BBC director general Tim Davie) தெரிவித்தார்.


டிவி, ரேடியோ, பிபிசி இணையதளம், பாட்காஸ்ட்கள், ஐபிளேயர் மற்றும் ஆப்ஸ் உள்ளிட்ட பிபிசி சேவைகளுக்கு உரிமக் கட்டணம் செலுத்தப்படுகிறது.


இந்த உரிமக் கட்டணம் தொலைக்காட்சி, வானொலி மற்றும் ஆன்லைன் சேவைகளுக்கு நிதியளிக்கிறது, இதில் பிரபலமான iPlayer ஆன்-டிமாண்ட் தளம், நிரலாக்கம் ஆகியவை அடங்கும்.


ALSO READ | சுனாமியால் பாதிக்கப்பட்ட டோங்கா! அணுக முடியாததால் அதிகரிக்கும் கவலைகள்


இந்த முடிவு, உரிமக் கட்டணம் செலுத்துவோருக்கு மட்டுமின்றி, ஐக்கிய ராஜ்ஜியம் முழுவதும் அவர்கள் செய்யும் முக்கியப் பணிகளுக்காக பிபிசியை நம்பியிருக்கும் கலாச்சாரத் துறையினருக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.


ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த பிபிசி, பொது நிதியில் இயங்கும் ஊடக நிறுவனமாகும். பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் என்னும் பொருள்படும் British Broadcasting Corporation என்ற பெயரின் சுருக்கம் பிபிசி (BBC). 


1927ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ஊடகம். பிபிசி தொலைக்காட்சி, வானொலி மற்றும் இணையத்தள சேவைகளை வழங்குகிறது. உலகின் பெரிய ஒலிபரப்பு நிறுவனமான பிபிசி உலகின் 28 மொழிகளில் நிகழ்ச்சிகளை வழங்குகிறது. 


ALSO READ | தொற்றுநோய் காலத்திலும் வட கொரியாவுக்கு தோள் கொடுக்கும் சீனா


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR