பாகிஸ்தான் தீவிரவாதிகள் முகாம்கள் மீது அமெரிக்கா தாக்குதல்!!
![பாகிஸ்தான் தீவிரவாதிகள் முகாம்கள் மீது அமெரிக்கா தாக்குதல்!! பாகிஸ்தான் தீவிரவாதிகள் முகாம்கள் மீது அமெரிக்கா தாக்குதல்!!](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/styles/zm_500x286/public/2018/01/24/124875-us-pak.jpg?itok=G6q_lr0U)
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள தீவிரவாதிகள் முகாம்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி உள்ளது.
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள தீவிரவாதிகள் முகாம்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி உள்ளது.
பாகிஸ்தான் உதவியுடன் செயல்பட்டு வரும் தீவிரவாதிகள் முகாம்கள் மீது ஆளில்லா விமானம் மூலம் அமெரிக்கா தாக்குதல் நடத்தி உள்ளது. தாக்குதல் நடத்தப்பட்ட பகுதி பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள குர்ரம் பகுதியாகும்.
இந்த தாக்குதலில் ஹக்கானி பயங்கரவாத அமைப்பின் தளபதி உட்பட 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என தகவல் வந்துள்ளது. மேலும் தாக்குதல் எப்படி நடத்தப்பட்டது தொடர்பான வீடியோவையும் அமெரிக்கா வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது