ஆளில்லா அமெரிக்கா விமானங்களை சுட்டு வீழ்த்த வேண்டும்: ஹபீஸ் சயீத்
பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லையில் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகள் மீது அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் குண்டு வீச்சு நடத்துகின்றன. இதற்கு பாகிஸ்தானில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பாகிஸ்தானின் இறையாண்மைக்கு எதிரான அமெரிக்கா தாக்குதல் நடத்துவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் ஹபீஸ் சயீத் பேசியதாவது:- பாகிஸ்தானுடன் பகமை காட்டும் விதமாக இந்தியாவுடன் அமெரிக்கா துணை நிற்கிறது. பாகிஸ்தானை நோக்கி வருகிற ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்த உத்தரவிட வேண்டும் ராணுவ தளபதிக்கு நாங்கள் கோரிக்கை விடுக்கிறோம்”என்றார்.
கடந்த மாதம் ஆப்கானிஸ்தான் தலிபான் தலைவர் முல்லா அக்தர் மன்சூர் அமெரிக்கா ஆளில்லா விமான குண்டு வீச்சில் கொல்லப்பட்டார். ஹபீஸ் சயீத் 2008-ம் ஆண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகளால் மும்பையில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தின் முக்கிய சதிகாரனாவார். இவனது தலைக்கு அமெரிக்கா 10 மில்லியன் டாலர் பரிசு தொகை அறிவித்துள்ளது.