அமெரிக்க இடைக்காலத் தேர்தல்கள் தற்போதைய பிடன் அரசுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா .!!
அமெரிக்காவில் நடத்தப்படும் இடைக்காலத் தேர்தல்கள் 2024ஆம் ஆண்டு அதிபர் தேர்தலிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் அவை மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
அமெரிக்காவில் அமெரிக்க இடைக்கால தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவடைந்துள்ளது. இந்தத் தேர்தல்கள் அமெரிக்காவின் குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி ஆகிய இரு கட்சிகளுக்கும் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இந்தத் தேர்தல் முடிவுகள் 2024 இல் நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலையும் பாதிக்கலாம் என்பதால் இது மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. முன்னாள் அதிபர்கள் டொனால்ட் டிரம்ப், பராக் ஒபாமா ஆகியோரும் இந்தத் தேர்தல்களில் அமோக ஆட்சியைப் பிடித்ததற்கு இதுவே காரணம். தற்போதைய அதிபர் ஜோ பிடனின் அதிகாரத்துக்கு இந்தத் தேர்தல்கள் மிகவும் முக்கியமானவை என்றும் கூறப்படுகிறது.
அமெரிக்காவின் இந்த இடைக்காலத் தேர்தல்கள் இந்தியாவைப் போல் இல்லை. இந்தியாவில் இடைக்காலத் தேர்தல்கள் என்றால் அரசு ஆட்சியை இழந்தாலோ அல்லது ராஜினாமா செய்தாலோ நடத்தப்படும் . ஆனால், அமெரிக்காவில் இடைக்கால தேர்தல்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகின்றன. அமெரிக்க அதிபர் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப்படுகிறார். இடைக்கால தேர்தல்கள் அதிபரின் பதவிக்காலத்தின் நடுப்பகுதியில் நடத்தப்படுவதால், அவை இடைக்கால தேர்தல்கள் என்று அழைக்கப்படுகின்றன.
அமெரிக்காவில் பாராளுமன்ற அமைப்பு
இந்தியாவில் அரசின் தலைவர் பிரதமராகவும், அமெரிக்காவில் அரசின் தலைவர் அதிபராகவும் இருக்கிறார். இந்தியாவில் பாராளுமன்றம் என்று அழைக்கப்படுவது அமெரிக்காவில் காங்கிரஸ் என்று அழைக்கப்படுகிறது. அமெரிக்காவிலும் காங்கிரஸின் இரண்டு அவைகள் உள்ளன - செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை. அமெரிக்காவில் இரண்டு கட்சி அமைப்பு உள்ளது. அதாவது இங்கு இரண்டு கட்சிகளுக்கு இடையே மட்டுமே அதிகாரப் போட்டி இருக்கும். இதியாவைப் போல் ஆயிரக்கணக்கான கட்சிகள் அமெரிக்காவில் இல்லை. அமெரிக்காவில் தற்போது ஜனநாயக கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது, ஜோபிடன் அதிபராக உள்ளார். இந்தக் கட்சியின் தலைவராக பராக் ஒபாமா இருந்தார். இரண்டாவது கட்சி குடியரசுக் கட்சி, அதன் தலைவர் டொனால்ட் டிரம்ப் அதன் இதற்கு முன் அதிபராக இருந்தார். முன்னதாக அதிபர் ஜார்ஜ் புஷ் குடியரசுக் கட்சியின் தலைவராகவும் இருந்தார்.
மேலும் படிக்க | மீண்டும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறாரா டொனால்ட் டிரம்ப்? சூசகத் தகவல்
அமெரிக்காவில் மொத்தம் 50 மாநிலங்கள் உள்ளன. ஒவ்வொரு மாநிலத்திற்கும் சுயேச்சையான அதிகாரங்கள் உள்ளன. அமெரிக்க செனட்டில் ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் இரண்டு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்த வழியில், செனட்டில் மொத்தம் 100 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த செனட்டர்கள் மொத்தம் 6 ஆண்டுகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். மறுபுறம், பிரதிநிதிகளாக இருப்பவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு சிறிய மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். மாநிலங்களின் ஆளுநர்கள் மற்றும் பிற பிரதிநிதிகளுக்கு தனித் தேர்தல் நடத்தப்படுகிறது.
தேர்தல் நடைபெறும் தொகுதிகளின் எண்ணிக்கை
அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் மொத்தம் 435 இடங்கள் உள்ளன. இந்த அனைத்து இடங்களுக்கும் தேர்தல் நடைபெற்று வருகிறது. இது தவிர, 100 இடங்களில் மூன்றில் ஒரு பங்கு இடங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தேர்தல் நடைபெறுவதால், செனட்டின் 35 இடங்களுக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது. இதனுடன், 36 மாநிலங்களுக்கான கவர்னர்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர். பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மைக்கு 218 இடங்கள் தேவை. தற்போது, செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை இரண்டிலும் ஜோ பிடனின் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மை பலத்தில் உள்ளது.
2024 தேர்தலில் ஏற்படுத்தும் பாதிப்பு
குடியரசுக் கட்சி சுமார் இருநூறு இடங்களில் வெற்றி பெறலாம் என அறிக்கைகள் கூறுகின்றன. அதே சமயம் ஜனநாயக கட்சிக்கு 175 இடங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலில் வெற்றி தோல்வி ஜோ பிடனின் அரசை பாதிக்கப் போவதில்லை. இருப்பினும், கடந்த இரண்டு ஆண்டுகளில் பெரும்பான்மை காரணமாக, சட்டங்களை நிறைவேற்றுவதில் ஜோ பிடன் எந்த சிக்கலையும் சந்திக்கவில்லை.
இடைக்காலத் தேர்தல்கள் எப்போதும் ஜனாதிபதி மற்றும் அவரது அரசாங்கத்தின் செயல்திறனுக்கான மதிப்பீடாகவே பார்க்கப்படுகிறது. இடைத்தேர்தலில் ஆளும் கட்சி பின்தங்கினால், தற்போதைய ஜனாதிபதியின் செயல்பாடு நன்றாக இல்லை என்று கருத்து வலுவடையும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஜோ பிடனுக்கு இந்தத் தேர்தல்கள் கௌரவ பிரச்சனையாக மாறியுள்ளது. அதே நேரத்தில், குடியரசுக் கட்சி பெரும்பான்மையைப் பெற்றவுடன், டொனால்ட் டிரம்ப் மீதான 2021 ஜனவரி 6 ஆம் தேதி,வன்முறை வழக்குகளின் விசாரணை முடிவுக்கு வரலாம்
இது தவிர, இந்தத் தேர்தல்களில் டொனால்ட் டிரம்ப் ஆதரிக்கும் வேட்பாளர் வெற்றி பெற்றால், 2024 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்பும் நுழைய முடியும் என்றும் நம்பப்படுகிறது. அதே சமயம், அவரால் தனது ஆதிக்கத்தை நிரூபிக்க முடியவில்லை என்றால், அவரது குடியரசு கட்சி அவரை அதிபராக நிறுத்த விரும்பாது.
மேலும் படிக்க | அமைதி பேச்சுவார்த்தைக்கு க்ரீன் சிக்னல் காட்டும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ