டிரம்ப் ஆதரவாளர்கள் கடந்த புதன்கிழமை அன்று அமெரிக்காவின் கேபிடோல் ஹில் கட்டிடத்தில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து பல உறுப்பினர்கள் இந்த கண்டன தீர்மானத்திற்கு ஆதரவாக உள்ளதாக அமெரிக்க நாடாளுமன்ற நாடாளுமன்ற சபாநாயகர் நான்ஸி பெலோஸி,  அவர் ஜனநாயகத்திற்கு ஒரு அச்சுறுத்தல் என்றும், அவர் விரைவில் பதிவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என கூறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டிரம்ப்பின் பதவிக் காலம் முடிய இன்னும் பத்து நாட்கள் உள்ள நிலையில், அவரை அதற்கு முன்பாக விரைவில் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று ஜனநாயக கட்சியினர் தீவிரமாக உள்ளனர்.


ஜோ பைடன் (Joe Biden) வெற்றியை உறுதிபடுத்த நாடாளுமன்றம் கூடியதை அடுத்து, ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களை கேபிடல் அணிவகுத்துச் செல்லுமாறு டிரம்ப் அறிவுறுத்தினார். இதனால் குழப்பம் ஏற்பட்டு, வன்முறை வெடித்தது.  கலவரத்தை கட்டுப்படுத்த போலீஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் நான்கு பேர் இறந்தனர்.


டொனால்ட் டிரம்ப் (Donald Trump) பதவி விலகவில்லை என்றால், அமெரிக்க அரசியலமைப்பின் 25 ஆவது திருத்தம், அல்லது கண்டன தீர்மானத்தை நிறைவேற்றி  அவரை பதவி விலகச் செய்ய வேண்டும் என அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் மேலும் தெரிவித்தார். 


எந்தவொரு குற்றச்சாட்டை முன் வைத்தாலும் நாடாளுமன்றத்தில் அதற்கான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதால், நாடாளுமன்ற உறுப்பினர்களால் ட்ரம்பை பதவியில் இருந்து நீக்க முடியுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. நாடாளுமன்றத்தில் அவரது  குடியரசுக் கட்சி உறுப்பினர்களுக்கு இன்னும் அதிகாரம் உள்ளது. ஆனால், அவரது சொந்த கட்சி உறுப்பினர்களில் சிலர், டிரம்ப் நடந்து கொண்ட விதம் குறித்து கண்டனம் தெரிவித்து, அது குற்ற செயல் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.  


மேலும் மூன்றில் இரண்டு பங்கு அவரை பதவியில் இருந்து நீக்குவதற்கு வாக்களிக்க வேண்டும். அப்போது தான் அவரை பதவி நீக்கம் செய்ய இயலும்.


ALSO READ | அமெரிக்கா தான் எங்கள் முதல் எதிரி.. மிரட்டுகிறார் Kim Jong Un..!!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR