அமெரிக்க அதிபர் இறுதிகட்ட தேர்தல் ஹிலாரி முன்ணணி
அமெரிக்காவில் ஒபாமாவின் பதவிக்காலம் முடிய உள்ளதால், அவருக்கு பதிலாக புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நவம்பர் மாதம் 8-ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி, ஜனநாயக கட்சி ஆகிய இருபெரும் கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்கள் அங்குள்ள மாகாணங்களில் நடந்து வருகின்றன.
வாஷிங்டனில் நடந்த அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் தேர்வுக்கான இறுதிக்கட்ட தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப்பை விட, ஜனநாயக கட்சி வேட்பாளரான ஹிலாரி கிளிண்டன் 12 புள்ளிகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
மொத்தம் 750 வாக்காளர்கள் வாக்களித்த இந்த தேர்தலில் ஹிலாரிக்கு ஆதரவாக 49 சதவீதம் பேரும், டிரம்பிற்கு ஆதரவாக 37 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர். ஒர்னால்டோ தாக்குதலுக்கு முன் நடத்தப்பட்ட இந்த தேர்தல் தொடர்பான கருத்து கணிப்பில், 55 சதவீதம் பேர் டிரம்ப்பிற்கு தாங்கள் ஓட்டளிக்க விரும்பவில்லை என தெரிவித்துள்ளனர். 43 சதவீதம் பேர் ஹிலாரிக்கு ஓட்டளிக்க விரும்பவில்லை என தெரிவித்துள்ளனர்.