அமெரிக்காவில் அடுத்த ஆண்டுடன் தற்போதைய அதிபர் பதவிக்கான காலம் முடிவடைகிறது. இதனால், அடுத்த ஆண்டில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.  2024ம் ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் மீண்டும் போட்டியிட உள்ளதாக ஜோ பைடன் அறிவித்துள்ளார். அதிபர் தேர்தலில் தாம் போட்டியிடப் போவதாக முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ள நிலையில், ஜோ பைடனும் போட்டியிடபோவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோ பதிவில், "ஒவ்வொரு தலைமுறையும் ஜனநாயகத்திற்கு ஆதரவாக எழுந்து நிற்க வேண்டிய நேரம் இது. அடிப்படை சுதந்திரத்திற்காக அனைவரும் ஆதரவாக நிற்க வேண்டும். இதுதான் நமது கொள்கை என நான் நம்புகிறேன். இதனால் தான் நான் மீண்டும் அமெரிக்க தேர்தலில் போட்டியிட உள்ளேன். அமெரிக்காவில் எல்லோரும் சமமாக நடத்தப்பட வேண்டும். அமெரிக்கர்கள் மிகவும் நாகரீகமானவர்கள் என்பது எனக்கு தெரியும். நேர்மையையும் மரியாதையையும் விரும்பு நாடு அமெரிக்கா. நாம் ஒற்றுமையாக இருந்தால் எதையும் சாதிக்க முடியும். வாருங்கள் சாதனை செய்வோம்" என்று அந்த வீடியோ பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


கடந்த 2020 தேர்தலில் ஜோ பைடனிடம் தோல்வியடைந்த முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும், 2024 ஆம் ஆண்டு அதிபர் பதவிக்கான குடியரசுக் கட்சி சார்பில் வேட்பாளராக போட்டியிடப் போவதாக கடந்த ஆண்டு நவம்பரில்  அறிவித்தார். அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதிக்கான தேர்தல் நவம்பர் 5, 2024 அன்று நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.



மேலும் படிக்க | விமானத்தில் ரகளை செய்த பயணி... குடிபோதையில் விமான பணிபெண்ணிற்கு முத்தமிட்ட 61 வயது நபர்!


இதற்கிடையில், NBC நியூஸின் புதிய தேசிய வாக்கெடுப்பின்படி, 51 சதவீத ஜனநாயகக் கட்சியினர் உட்பட அனைத்து அமெரிக்கர்களில் 70 சதவீதம் பேர் பைடன் இரண்டாவது முறையாக போட்டியிடக்கூடாது என்று நினைக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் 80 வயதான பிடனின் வயது காரணமாக அதிபர் தேர்தலில் பங்கேற்க வேண்டாம் என அறிவுறுத்துகின்றனர். அவர் வெற்றி பெற்றால், 2025ல் இரண்டாவது பதவிக்காலம் தொடங்கும் போது அவருக்கு 82 வயது இருக்கும். டிரம்ப்பைப் (Donald Trump) பொறுத்தவரையில், மூன்றில் ஒரு பங்கு குடியரசுக் கட்சியினர் உட்பட 60 சதவீத அமெரிக்கர்கள், அவரும் அதிபர் தேர்தலில் களமிறங்கக் கூடாது என்று நம்புகின்றனர்.


மேலும் படிக்க | உயிரிழந்த 2 மணி நேரத்தில் நடந்த வியப்பான சம்பவம்!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ