பாகிஸ்தானின் செயல்பாடுகளை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமெரிக்க மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் உரையாற்றிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்:-


பயங்கரவாத இயங்கங்கள் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்கும் பாகிஸ்தானின் செயல்பாடுகள் குறித்து விமர்சிக்காமல் அமைதியாக இருக்க முடியாது. 


ஆப்கானிஸ்தானில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளும் அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றினால், பாகிஸ்தானுக்கு நன்மைகள் கிட்டும். ஆனால், பயங்கரவாதிகளுக்கு ஆதரவளித்து வருவதால் ஆப்கானிஸ்தான் பெரிய இழப்புகளைச் சந்தித்துவருகிறது. 


பாகிஸ்தானுக்கு கோடிக்கணக்கான டாலர்கள் அமெரிக்கா நிதியுதவியாக அளிக்கிறது. அதேநேரம், நாம் எதிர்த்துப் போரிட்டுவரும் பயங்கரதிகளின் புகலிடமாக அந்நாடு விளங்குகிறது. இந்நிலை உடனடியாக மாற வேண்டும். இல்லையென்றால் பயங்கரதிகளுக்கு ஆதரவளித்ததற்கான விலையை பாகிஸ்தான் கொடுக்கவேண்டி வரும். 


உள்நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து அமைதிப் பாதைக்கு பாகிஸ்தான் திரும்பவேண்டிய நேரம் இது’ என்று பேசினார். இந்தியாவுடனான உறவுகளை மேம்படுத்த அமெரிக்கா விரும்புவதாகக் கூறிய டிரம்ப், போரால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானை பொருளாதாரரீதியில் உயர்த்த இந்தியா உதவ வேண்டும்'' என்றும் கேட்டுக்கொண்டார்.